Salem

News October 11, 2024

சேலம் மாநகரில் பரவலாக நல்ல மழை

image

ஆயுதப்பூஜை பண்டிகை இன்று சேலத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மத்திய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, சாரதா கல்லூரி சாலை, அழகாபுரம், 5 ரோடு, அம்மாப்பேட்டை, கோரிமேடு, ஏற்காடு அடிவாரம், பட்டைக்கோவில் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

News October 11, 2024

சிலிண்டர் வெடித்து விபத்து: டீச்சர் உயிரிழப்பு

image

மடிப்பாக்கம் குபேரன் நகரைச் சேர்ந்த ஆசிரியை வின்சி புளோரா என்பவர் வீட்டில், கடந்த 2 தினங்களுக்கு முன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், வின்சிக்கு உடல் முழுவதும் 60% தீக்காயமும், சிலிண்டர் கொடுத்த மணிகண்டனுக்கு 45% தீக்காயமும் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட நிலையில், வின்சி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இவர் சேலத்தை சேர்ந்தவர் என கூறுகின்றனர்.

News October 11, 2024

எடப்பாடி பழனிசாமி ஆயுதப்பூஜை வாழ்த்து

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயுதப்பூஜை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

News October 11, 2024

சேலம் மாவட்டத்தில் கனமழை

image

சேலம் மாவட்டத்தில் இன்று (அக்.11) காலை 6 மணி வரை 107.1 மி.மீ. மழைப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, டேனிஷ்பேட்டையில் 47 மி.மீ., நத்தக்கரையில் 14 மி.மீ., ஏற்காட்டில் 13.2 மி.மீ., ஏத்தாப்பூரில் 12 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது.

News October 11, 2024

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைவு

image

மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 7,226 கன அடியிலிருந்து 5,317 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 90.280 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 52.972 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

News October 11, 2024

ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களின்கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் (ம) கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அவ்வகையில், சேலத்தில் 162 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க https://drbslm.in/இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

News October 10, 2024

நீட் ரகசியம் எப்போது வெளிவரும்..? எடப்பாடி பழனிசாமி

image

“நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை உதயநிதி இதுவரை வெளியிடவில்லை; நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் குரல் கொடுக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?, மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது. நிறைய படிப்புகள் இருக்கின்றன”- சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

News October 10, 2024

விமானத்தில் செல்வோர் கவனத்திற்கு

image

வரும் அக்.27 முதல் குளிர்கால அட்டவணைபடி, சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் விமானங்களின் பயண நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. புதிய அட்டவணைப்படி, தினமும் சேலத்தில் இருந்து ஒருமுறை மட்டுமே சென்னைக்கு விமானம் இயக்கப்படவுள்ளது.

News October 10, 2024

சேலத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்

image

சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 23-வது வார்டு திருவாக்கவுண்டனூர் முல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததை நேரில் பார்வையிட்ட பாமக எம்எல்ஏ அருள், மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து மழைநீரை வெளியேற்றுமாறு அறிவுறுத்தினார். அத்துடன், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

News October 10, 2024

சுரங்கப்பாலத்தை சூழ்ந்த மழைநீர்

image

சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, கந்தம்பட்டி ரயில்வே சுரங்கப்பாலத்தில் வெள்ளம் சூழந்தது. கந்தம்பட்டி சுரங்கப்பாலத்தில் மழைநீர் தேங்கியதால் இளம்பிள்ளை செல்லும் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து இளம்பிள்ளை செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர். பேருந்துகளும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

error: Content is protected !!