India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாய் கடியால் காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பண்டிகைகள், விடுமுறையை முன்னிட்டு, ஏப்ரல் 11- ஆம் தேதி முதல் வரும் மே 04- ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளிக்கிழமையில் தாம்பரத்தில் இருந்து போத்தனூருக்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் போத்தனூரில் இருந்து தாம்பரத்திற்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (06185/06186) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூபாய் 50 உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 886.50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் 0427-2450301▶️காவல்துறை கண்காணிப்பாளர் 0427-2274747. ▶️சேலம் மாநகராட்சி ஆணையாளர்,0427-2213131▶️ சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் 0427-2224000 ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-9445000222 ▶️மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் 9499933489 ▶️லஞ்ச ஒழிப்புத் துறை 0427-2411111..மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 11- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கும், ஏப்ரல் 14- ஆம் தேதி போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் (06027/06028) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

தமிழ் புத்தாண்டு, விஷு, புனிதவெள்ளியை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 10, 11, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (06089/ 06090) இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் இருந்து வெள்ளிமலை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் ஏறிய மூன்று பேர், உள்ளே செல்லாமல் படியிலேயே நின்றுகொண்டு, நடத்துனர் செந்தில்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன்,அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட மாணவர் விஜய் (20), ரீகன் (21) மற்றும் பெயிண்டர் விக்ரம் (23) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 10) சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் குமரகிரியில் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார். இத்தலம், தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான தலமாக திகழ்கிறது. மேலும், இங்கு தண்டாயுதபாணிக்கு மாம்பழம் படைத்து வணங்கிட புத்திர பாக்கியம் கிட்டும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

சேலம் மாவட்டம், மேச்சேரி மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்த கோகுல் சக்தி (21) இந்திய ராணுவத்தில் அக்னி பார் திட்டத்தின் கீழ் சேர்ந்து கடந்த 11 மாதமாக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்புக்கான காரணம் தெரியவில்லை எனவும், உடல் வந்த பிறகு தான் காரணம் தெரியும் என குடும்பத்தினர் தகவல்!
Sorry, no posts matched your criteria.