India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கோட்டத்தின் மூலம் 500 சிறப்பு பஸ்கள் வருகிற 4-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இதன் மூலம் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி வெளியூர் பயணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்களில் மட்டும் வழக்கமான நாட்களை விட கூடுதலாக சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
சேலம் மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த நந்தகுமார் மதுவிலக்கு தடுப்பு பிரிவுக்கும், கருப்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய கண்ணையன் அன்னதானப்பட்டிக்கும், இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் உள்பட 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பிறப்பித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நமது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் எதிர்வரும் 5/11/2024 செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. மேலும் 19/11/2024 அன்று பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் தலைமையில் நடக்க உள்ளது.
மயிலாடுதுறை- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில்(16811) நவ.02, 03, 09, 10, 16, 17, 23, 24, 30 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து கரூர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், சேலம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16812) கரூரில் இருந்து மயிலாடுதுறை வரை மட்டும் இயக்கப்படும். ரயில் இருமார்க்கத்திலும் சேலம்- கரூர் இடையே இயக்கப்பட மாட்டாது என சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தீபாவளி கொண்டாட சொந்த ஊர் வந்தவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக முன்பதிவற்ற சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு முன்பதிவற்ற ரயில் நவ.03ஆம் தேதி காலை 7:45 மணிக்கு போத்தனூரில் புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சங்ககிரி, சேலம் வழியாக மாலை 4:50 மணிக்கு சென்னையை சென்றடையும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1866 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி சேலம் நகராட்சியாக உருவாகிய நாள் இன்று.1917 இல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நகராட்சித் தலைவராக ராஜாஜி பொறுப்பேற்றார். 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநகராட்சியாக சேலம் மாறியது. சேலம் நகராட்சி உருவாகி இன்றுடன் 158 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்று சேலம் நாள் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
சேலம் மாவட்டம், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் 10.3 கோடி ரூபாய்க்கு இறைச்சி விற்பனையானது. தீபாவளி பண்டிகை என்பதால் இறைச்சி விலை அதிகரித்து உள்ளது என்று இறைச்சி வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் கடந்த 3 நாட்களில் 30,000 பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 15,000-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.
சேலம் மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையை இன்று (அக்.31) பொதுமக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தும் புத்தாடைகளை அணிந்தும், இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடித்தும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். புதுமண தம்பதிகள் தல தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.