Salem

News April 25, 2025

தொடர் குற்றச்செயல்- குண்டர் சட்டத்தில் பெண் கைது!

image

சேலம் மாநகரில் பொதுவிநியோகத் திட்ட அரிசிக் கடத்தி தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த பரிமளா என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது காவல்துறை. இதையடுத்து அவர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

News April 25, 2025

செல்போன் பேசினால் லைசென்ஸ் காலி!

image

கடந்த மூன்று மாதத்தில் சேலம், தருமபுரியில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 233 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 146 ஓட்டுநர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தயவுசெய்து வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதைத் தவிருங்கள் பாதுகாப்பாக இருங்கள்.

News April 24, 2025

மேகாலயாவில் கூட்டத்தில் சேலம் எம்.பி. பங்கேற்பு

image

மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் இன்று (ஏப்.24) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் மூன்றாவது துணைக்குழு, ஷில்லாங்கிலும் அதைச் சுற்றிலும் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்களின் அலுவல் மொழி ஆய்வுக் கூட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு உரையாற்றினார்.

News April 24, 2025

கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி!

image

சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் ஆர்.ஆர் திருமணமஹாலில் இயங்கி வரும், இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கறவை மாடு வளர்ப்பு, மண் புழு உரம் தயாரிக்கும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 31 நாட்களுக்கு வழங்கப்படும் இப்பயிற்சியில் உபகரணங்கள், சீருடை, தேநீர், மதிய உணவுடன் இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமப்புற ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். நேரில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 28 ஆகும்.

News April 24, 2025

வார இறுதி நாட்கள் விடுமுறை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 19 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை போக்குவரத்து இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெற அறிவுரை.

News April 24, 2025

சேலம் பயணிகள் கனிவான கவனத்திற்கு

image

சேலம் கோட்டத்தில் என்ஜினீயரிங் பணி நடைபெறுவதால் வண்டி எண்: 16844 பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் ஏப்.26, 29 ஆகிய தேதிகளில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும். வண்டி எண்: 16811 மயிலாடுதுறை-சேலம் மெமு எக்ஸபிரஸ் ஏப்.26, 29-ந் தேதிகளில் காலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து து புறப்பட்டு கரூர் மாயனூர் வரை மட்டும் இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

News April 24, 2025

சேலத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை!

image

சேலம் மாவட்ட திட்ட மேலாண்மை அலகில் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.35,000 வழங்கப்படும். இதற்கு B.Tech, M.B.A., M.Sc. அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி முடித்திருக்கும் நபர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்: 207-ல் உள்ள நகர்ப்புற வாழ்வாதார மையம் மேலாளரிடம் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

News April 24, 2025

சேலம் மத்திய சிறையில் வேலை உடனே விண்ணப்பிக்கவும்!

image

சேலம் மத்திய சிறையில் காலியாக உள்ள சமூக வழக்கு சேவை நிபுணர் Social Case Work Expert பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்ற என சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் கோ.வினோத் தெரிவித்துள்ளார். இதற்கு தொகுப்பூதியமாக ரூ.15000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0427-2403551, 2400639 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 24, 2025

அசாமில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சேலம் எம்.பி. பங்கேற்பு

image

அசாம் மாநிலம், கவுகாத்தியில் இன்று (ஏப்.23) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் மூன்றாவது துணை குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் தி.மு.க.வின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவருக்கு அசாம் மாநில அரசு சார்பில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

News April 23, 2025

சேலம் :+1 மாணவன் விஷம் குடித்து தற்கொலை

image

சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான் தெற்கு புதூரைச் சேர்ந்த விவசாயியின் மகன் யுவராசு (16).பிளஸ் 1 பொதுத்தேர்வு முடித்துள்ள நிலையில் யுவராசு செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். இதை தந்தை செல்வம் கண்டித்துள்ளார்.தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை அருந்தியுள்ளார்.மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யுவராசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரணை

error: Content is protected !!