Salem

News November 19, 2024

ஜிம்மிலேயே பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

image

சேலம் மாநகரம், கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஜிம் உரிமையாளரான மகாதீர் முகமது (35) மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக ஜிம்மிலேயே உயிரிழந்தார். உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர், ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்து வந்ததாக அவரின் தாயார் கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 19, 2024

சேலம் வரும் அமைச்சர் பெரியகருப்பன்

image

சேலம் மாவட்டத்தில் நவ.20-ம் தேதி காலை 10.30 மணிக்கு நேரு கலையரங்கத்தில் நடைபெறும் மாநில அளவிலான 71-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இவ்விழாவில், புதிய நியாய விலைக்கடை கட்டடங்களைத் திறந்து வைத்தும், புதிய கூட்டுறவு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளனர்.

News November 19, 2024

தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு

image

சேலம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கூட்டம் வரும் நவ.25ஆம் தேதி நடைபெற உள்ளது. சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க விரும்புவோர் துணி நூல் துறை மண்டல இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் dd.textile.salem.regional@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News November 19, 2024

சேலம் என பெயர் எப்படி வந்தது?

image

மலைகளால் சூழ்ந்து காணப்பட்டதால் “சைலம்” என்று அழைக்கப்பட்டு அது “சேலம்” என மருவியதாகவும். சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு சேலம் என மருவியதாக கூறப்படுகிறது. மேலும், சேலை நெசவுக்கு பெயர் பெற்று சேலையூர் என்ற பெயர் “சேலம்” என காலப்போக்கில் மருவியதும் என கூறுவார்கள். எனவே, சேலம் மக்களே உங்க ஊர் பெயர் எப்படி வந்தது என கமென்ட் செய்யவும்.

News November 18, 2024

சேலம்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டிய பொன்.மாணிக்கவேல் ➤அரசியல் பணி மேற்கொண்ட ஆசிரியர் சஸ்பெண்ட் ➤சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம் ➤நாதக மாவட்ட செயலாளர் பதவி விலகல் ➤திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் ➤சேலத்தில் 42,000 பேர் விண்ணப்பம் ➤பேனர் கிழிப்பு: மறியலில் ஈடுபட்ட விசிகவினர் ➤மழையில் முளைத்த விஷகாளான் உதயநிதி: EPS ➤ரயில் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு.

News November 18, 2024

அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டிய பொன்.மாணிக்கவேல்

image

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்திந்த அவர், கோயில் பாதுகாப்பு படையை தமிழக அரசு உடனடியாக கலைத்திட வேண்டும் என்றும், அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகள் தான் மிகவும் மோசமானவர்கள் என்றும், அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகள் தான் கோயில் பணத்தை அதிக அளவு திருடுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

News November 18, 2024

அரசியல் பணி மேற்கொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை

image

கட்சி சார்ந்த பணிகளை மேற்கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சேலம், அரியாம்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் சீதாராமனை பணியிடை நீக்கம் செய்து தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். விசாரணையில், அரசியல் கட்சி சார்ந்த விவசாய சங்கத்தில் பொறுப்பாளராக இருப்பது தெரிய வந்ததால் நடவடிக்கை. எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பாக நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றியதாக கூறப்படுகிறது. 

News November 18, 2024

நா.த.க மாவட்டச் செயலாளர் பதவி விலகல்

image

நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகியுள்ளது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியில் இருந்து தன்னை விடுவித்து கொள்வதாக சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகி வருவதால் நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News November 18, 2024

திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

image

சேலம் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் வாழப்பாடியில் உள்ள மாவட்ட அலுவலத்தில் செயற்குழு கூட்டம் இன்று மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News November 18, 2024

சேலத்தில் 42,000 பேர் விண்ணப்பம்

image

கடந்த 2 நாட்களாக, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் 42,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் நவம்பர் 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!