Salem

News March 21, 2024

வாழப்பாடி: ரூ.62,000 மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்

image

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 224 மது பாட்டில்கள் நேற்று(மார்ச் 20) பறிமுதல் செய்யப்பட்டது. வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையம் அருகே சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, புதுச்சேரியிலிருந்து வந்த காரை சோதித்தில், ரூ.62,000 மதிப்புள்ள 224 மதுபாட்டில்களை அனுமதியின்றி எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

News March 20, 2024

சேலத்திலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

News March 20, 2024

அதிமுக சார்பில் சேலத்திற்கு புதிய வேட்பாளர்

image

2019 மக்களவை தேர்தலில், சேலம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் என்பவர் 4,59,376 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதையடுத்து 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் புதிய வேட்பாளராக பி.விக்னேஷ் போட்டியிடுவதாக அதிமுக தலைமை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News March 20, 2024

சேலம் நாடாளுமன்றத்திற்கு புதிய வேட்பாளர்

image

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில், சேலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் என்பவர் 6,06,302 வாக்குகள் பெற்று எம்பியாகி இருந்தார். இந்நிலையில் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதிக்கு திமுக சார்பில் புதிய வேட்பாளராக டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News March 20, 2024

சேலம் திமுக வேட்பாளர் இவர்தான்!

image

சேலம் திமுக மக்களவை தொகுதி வேட்பாளராக செல்வ கணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

News March 20, 2024

சேலம் அதிமுக வேட்பாளர் இவர்தான்!

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக விக்னேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

News March 19, 2024

சேலம் வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் 

image

மார்ச் 23, 30 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும், மார்ச் 24, 31 ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (மார்ச் 20) தொடங்கவுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது அதிகபட்சமாக வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவர். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது மேற்படி அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் தீவிரமாக கண்காணிக்கப்படும். விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ஆட்சியர் தெரிவித்தார்.

News March 19, 2024

திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது

image

இன்று சேலத்தில் நடைபெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது என்று பேசினார். மேலும் தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றிதான் நாடு முழுவதும் உள்ள பேச்சாக இருக்கிறது என்று பேசினார் பிரதமர் மோடி.