Salem

News March 22, 2024

சேலம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கீடு

image

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாமகவுக்கு சேலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்‌ சேலம் மாவட்ட பாமக‌ நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே சேலத்தில் திமுக, அதிமுக மற்றும் பாமக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

News March 21, 2024

சேலம்: ரூ.4.75 லட்சம் பறிமுதல்

image

சேலம் மாவட்டம் நாழிகல்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் பிரகாஷ் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.4.75 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, சேலம் தெற்கு வட்டாட்சியர் மற்றும் தேர்தல் உதவி அலுவலருமான செல்வராஜிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 21, 2024

தெற்கு ரயில்வே பயணிகள் கவனத்திற்கு

image

சேலம் தெற்கு ரயில்வே பயணிகள் கவனத்திற்கு
மங்களூருவில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு மார்ச் 22ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2024

சேலத்தில் 99.44 டிகிரி வெயில்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (மார்ச்.21) மாவட்டத்தில் அதிகபட்சமாக 99.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News March 21, 2024

கள்ளக்குறிச்சி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி போட்டியிட்டு வென்ற கள்ளக்குறிச்சித் தொகுதியில், இந்த முறை திமுக-வின் தியாகதுருகம் பேரூர் கழகச் செயலாளர் மலையரசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு கிளைக்கழக செயலாளராக கட்சிப் பணியைத் தொடங்கியவர். ஒன்றியத் துணைச் செயலாளராகவும், மாவட்ட பிரதிநிதி மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராகவும் கட்சிப் பணியாற்றியுள்ளார்.

News March 21, 2024

சேலம்: நகைக்கடன்… அதிரடி உத்தரவு

image

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன்களை ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகைக் கடன் வழங்குவதற்கு உரிய ஆவணங்கள், பதிவேடுகள் முறையாக பேணப்பட்டு இருக்கிறதா? விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த குழுக்கள் ஜூன் 15-ஆம் தேதிக்குள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 21, 2024

சேலம்: வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

image

சேலம், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகளில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சேலத்தில் நடைபெற்றது.சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மலையரசன் ஆகியோரை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார், கூட்டத்தில், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 21, 2024

தருமபுரி தொகுதி மேட்டூர் சட்டமன்றத்தின் புதிய திமுக வேட்பாளர்

image

2024 மக்களவைத் தேர்தல், தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி போட்டியிடவுள்ளார். இவருக்கு 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றபோது, இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மேட்டூர் சட்டமன்ற தொகுதி தருமபுரி மக்களவைத் தொகுதியில் அடங்கும்.

News March 21, 2024

சேலம் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

2024 மக்களவைத் தேர்தல், சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி போட்டியிடவுள்ளார். இவர், 1991இல் நாமக்கல் எம்எல்ஏ-வாகவும், 1991 – 1996 ஆண்டுகளில் உள்ளூராட்சி அமைச்சராகவும் இருந்துள்ளார். 1999 மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2008இல் அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். திமுக-வின் 11 புதிய வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.

News March 21, 2024

சேலம்: முதியோர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள்(85 வயதிற்கு மேற்பட்ட) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.