Salem

News February 9, 2025

நலவாழ்வு அலுவலர் பணிக்கு இன்று நேர்காணல்!

image

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில் காலியாக உள்ள நலவாழ்வு அதிகாரி பணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில் இன்று (ஜன.09) நேர்காணல் நடைபெறவுள்ளது. கல்வி தகுதியாக பி.எஸ்.சி நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. முடித்திருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூபாய் 18,000 வழங்கப்படும்.

News February 9, 2025

சேலத்தில் மண் சரிந்து ஒருவர் பலி

image

ஆந்திர மாநிலம், மரிபோட்டாவைச் சோ்ந்த சிம்ஹாசலம் (50). இவர் சமையல் எரிவாயு குழாய் பதிக்கும் தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். மேச்சேரி ஸ்ரீராமணியூரில் சனிக்கிழமை குழி தோண்டிய போது மண் சரிந்து விழுந்து சிம்ஹாசலம் காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவர் ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்தனா்.

News February 9, 2025

சேலம் சரகத்தில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

சேலம் சரகத்தில் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த மாதேஸ்வரி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பிரிவுக்கும், செல்வராஜ் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மாவதி மத்தூர் ஸ்டேஷனுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் கவிதா குற்றப்பிரிவு ஸ்டேஷனுக்கு மாற்றி, டிஐஜி உமா உத்தரவிட்டார்.

News February 8, 2025

பிப்.11-ல் இறைச்சி கடைகள் இயங்காது!

image

வள்ளலார் தினத்தையொட்டி, வரும் பிப்.11- ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளில் விற்பனை தடைச் செய்யப்படுகிறது. அரசின் உத்தரவினை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

சேலத்தில் தினந்தோறும் தொடரும் தற்கொலைகள்

image

சேலம் மாநகரில் கடந்த 10 நாட்களாக தினந்தோறும் குறைந்தபட்சம் மூன்று தற்கொலைகள் நிகழ்ந்து வருகிறது. அதன்படி கிச்சிப்பாளையம் பகுதியில் ஜெயராமன் என்பவரும், அஸ்தம்பட்டி பகுதியில் சசிகலா என்பவரும், சூரமங்கலம் பகுதியில் பிரபாகரன் என்பவரும் இன்று பல்வேறு பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். சேலம் மாநகரில் மட்டும் தினமும் தற்கொலைகள் தொடர்வது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

News February 8, 2025

ரயில்களில் விதிமீறலில் ஈடுபட்ட 5,800 பேர் மீது வழக்குகள்

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை 10 மாதங்களில் ரயில்வே நிலையங்கள் மற்றும் ரயில்களில் விதிமீறலில் ஈடுபட்ட 5,800 பேர் மீது ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுபடி அவர்களிடம் ரூபாய் 37.43 லட்சம் அபராதத் தொகையை வசூலித்தனர்.

News February 8, 2025

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

image

சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் (30). லேப் டெக்னீசியன். இவர் கடந்த 5-ந் தேதி ஓமலூரில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க மேச்சேரி பிரிவு ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி அருள் பாக்கெட்டில் இருந்த ரூ.550-ஐ பறித்து கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் ஈஸ்வரன், சதாசிவம் ஆகியோரை கைது செய்தனர்.

News February 8, 2025

மாணவியிடம் அத்துமீறல்: தற்காலிக ஆசிரியர் பணி நீக்கம்

image

ஓமலூர் அருகே சிக்கனம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக சிவக்குமார் பணியாற்றி வந்தார். அவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமாரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார.

News February 8, 2025

சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

பாசூர்-சாவடிப்பாளையம் ரயில்வே யார்டுகளில் பொறியியல் பராமரிப்பு காரணமாக, பிப்.08, 10 தேதிகளில் செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) செங்கோட்டையில் இருந்து கரூர் வரையிலும், ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்படும்; இந்த ரயில்கள் கரூர்-ஈரோடு இடையே இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News February 8, 2025

அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

image

“மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை கடந்த 3 மாதங்களாக ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசால் வழங்கப்படவில்லை என வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, நிதி நிலையைக் காரணம் காட்டி, மாற்றுத் திறனாளிகளை வஞ்சிக்கும் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்”- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

error: Content is protected !!