Salem

News April 4, 2024

சேலம்: ரூ.1.88 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் நேற்று(ஏப்.3) வரை நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படையினர் மூலம் ரூ.1.88 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.

News April 4, 2024

பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி உத்தரவு

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

News April 3, 2024

உரிமை தொகையை நிறுத்தினால் சும்மா விடமாட்டேன்- இபிஎஸ் 

image

சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேசுகையில், சுவரில் சின்னம் வரைய அனுமதிக்கவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவோம் என திமுகவினர் மிரட்டுவதாக பொதுமக்கள் கூறிவருகின்றனர். உரிமைத் தொகையை நிறுத்தினால் சும்மா விட மாட்டேன். திமுகவின் தில்லுமுல்லுவை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும் என்றார்.

News April 3, 2024

ஓமலூர்: பிரச்சார ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

image

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் சேலத்தில் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பிரச்சார ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஓமலூரில் நேற்று(ஏப்.3) நடைபெற்றது. இதில் எம்எல்ஏ ராஜேந்திரன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார். மேலும் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் ,திமுக தேர்தல் பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.

News April 2, 2024

சேலத்தில் முதல் கோடை மழை

image

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்ப அலைகள் வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று திடீரென சேலம் மாநகரில் மிதமான முதல் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

News April 2, 2024

சேலம்: CSK கோடை கால கிரிக்கெட் பயிற்சி

image

சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) நடத்தும் சூப்பர் கிங்ஸ் அகாடமியில், ஏப்.6ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி சேலம் நீலாம்பாள் சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. 6 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். மாணவ சேர்க்கைக்கு 73054 22282 தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு www.superkingsacademy.com என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2024

7 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

image

சேலம் மாவட்டம், நெத்திமேடு ஜங்ஷன் பகுதியில் (01.04.2024) நேற்று மாலை பறக்கும் படை அதிகாரியான தலைவாசல் வேளாண் துறை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவர் கொண்டு வந்த 7 கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசுக்கு தேவையான முத்து மற்றும் கொக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News April 2, 2024

சேலம்: சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

சேலத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 102.74 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

வனவாசி: ரூ.2 லட்சம் மதிப்பிலான புடவைகளை பறிமுதல்

image

சேலம், மேட்டூர் வட்டம், வனவாசி பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜோதிபாசு தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இளம்பிள்ளையில் இருந்து நங்கவள்ளி நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய அனுமதியின்றி ரூ.2 லட்சம் மதிப்பிலான 75 விலை உயர்ந்த புடவைகளை எடுத்துச் செல்வது தெரியவந்தது. அதனை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.

News April 1, 2024

வெயிலின் தாக்கம் 102.7 டிகிரியாக பதிவு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்ரல்-01) மாவட்டத்தில் அதிகபட்சமாக 102.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.