India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடர் மழையின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு உத்தரவின்படி நடைபெறவிருந்த அரையாண்டு பொதுத் தேர்வுகள் அரசு அறிவிக்கும் மறு தேதியில் நடைபெறும் என்று மாவட்ட கல்வி அலுவலர் கபீர் தெரிவித்துள்ளார்.
சேலம், ஆத்தூர் வட்டம் கொத்தாம்பாடி கிராமத்தில் தமிழக அரசு உத்தரவின்படி மக்கள் சந்திப்பு முகாம் இன்று வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர் மழையின் காரணமாக மக்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் அந்த முகாமானது மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாக சார்பில் அறிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையை தொடர்ந்து சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
சேலத்தில் இன்று (டிச.12) பல்வேறு பகுதியில் லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. சேலம் மக்களே உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
➤வணிகர்கள் சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ➤ ஆத்தூர் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க, சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி ➤ கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சேலத்திலிருந்து நாளை முதல், திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து ➤ தீவட்டிப்பட்டி நகை கடையில் திருட்டு: கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை ➤தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகள், மேலும் தனியார் ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகள், சேலம் தகுதிப் பெற்ற அலுவலரால் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி பொது ஏலம் விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 115- ல் காலை 11 மணிக்கு ஏலம் நடக்கவுள்ளதாக சேலம் மாவட்ட டி.ஆர்.ஓ. மேனகா தெரிவித்துள்ளார்.
மஹா கார்த்திகை தீபம், பௌர்ணமியை முன்னிட்டு, டிசம்பர் 12-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக சேலம் அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சேலம், தருமபுரி, ஓசூர் பேருந்து நிலையங்களில் மேற்கண்ட தேதிகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து வீதம் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த பிரேம்குமார் (35), கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நவ.22-ல் கூடிய 116-வது ஆட்சிக்குழு கூட்டத்தில் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அவரை பணி நீக்கம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பிரேமுகுமாரை பணி நீக்கம் செய்து பதிவாளர் விஸ்வநாத மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
கடைகளில் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற கோரி தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சேலத்தில் இன்று கடைகள் அடைத்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் காலை 9 மணி முதல் 12 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.