India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் இன்று (டிச.03) காலை 06.00 மணி நிலவரப்படி 671.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, ஏற்காட்டில் 98.2 மி.மீ. மழையும், சேலம் மாநகரில் 94.3 மி.மீ. மழையும், ஆணைமடுவுவில் 63 மி.மீ. மழையும், ஆத்தூரில் 59 மி.மீ. மழையும், ஓமலூரில் 47 மி.மீ. மழையும், டேனிஷ்பேட்டையில் 42 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சேலம், கந்தம்பட்டியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ள சேலம்- கோவை நெடுஞ்சாலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.03) காலை நேரில் பார்வையிட்டார். உரிய முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டிருந்தால், சேலத்தில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருந்திருக்கும் என்றார்.
நடப்பு டிசம்பர் மாதத்தில் சேலம் மாநகர் பகுதியில் பிரசவிக்க உள்ள 652 கர்ப்பிணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதன்படி அவர்களுக்கான பிரசவ நாளை முன்கூட்டியே பார்த்து அவர்களது வீடுகளுக்கு சென்று அறிவுரை வழங்கி அவர்கள் விருப்பப்படும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என மாநகர நல அலுவலர் முரளிசங்கர் தெரிவித்துள்ளார்.
சேலம், கந்தம்பட்டி பைபாஸ் அருகே கோவை- பெங்களூரூ செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புகுந்த மழை தண்ணீரினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக வாகனங்கள் அனைத்தும் சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சேலம் குகை- திருச்சி பிரதான சாலையில் மாற்றி விடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, கொண்டலாம்பட்டி சீரங்கன் தெருவில் கால்வாய் உடைந்து மழைநீர் சாக்கடை கழிவுநீருடன் வீடுகளை சூழ்ந்துக் கொண்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கிய நீரால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 238 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வாழப்பாடி-58, ஆனைமடுவு-100, ஆத்தூர்- 56, சேலம் -59, தம்மம்பட்டி-64, கெங்கவல்லி-60, ஏத்தாப்பூர்- 80, கரியகோவில் – 149, வீரகனூர்-63, நத்தகரை-25, மேட்டூர் – 44, எடப்பாடி -20.4, ஓமலூர் – 99, சங்ககிரி -24.4, டேனிஷ்பேட்டை- 96 என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,235.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
2023-2024-ஆம் நிதியாண்டில் மட்டும் சேலம் விமான நிலையம் ரூபாய் 99 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் விமான சேவை தொடங்கப்பட்டது. அதேபோல் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடப்பாண்டின் அக்டோபர் மாதம் வரை 1,19,025 பயணிகளை சேலம் விமான நிலையம் கையாண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் (14.12.24) அன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்ள வேண்டும் என இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இன்று (டிச.3) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நாளை (டிச.3) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.