India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டட மற்றும் இதர கட்டுமான பணிகளில் பணிபுரியும் பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வாக்களிக்க வசதியாக தேர்தல் நாள் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தினகரன் நேற்று(ஏப்.15) தெரிவித்துள்ளார். இது குறித்து புகார்கள் இருந்தால் 95973 86807 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல்-14) மாவட்டத்தில் அதிகபட்சமாக 101.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
காட்பாடி -அரக்கோணம் இடையே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் 17, 24, 30ம் தேதி ஆகிய நாட்களில் கோவை -சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை -காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. கோவையில் இருந்து புறப்படும் ரயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில். அதிமுக ஆட்சியில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டது. திமுக ஆட்சியில் அதற்கான காலத்தை நீடித்து தராததால் காலாவதியானது என்றார்.
சேலம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ஆட்சியராக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகிற 17, 18-ந் தேதிகளில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மக்களவைத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தபால் வாக்கு பதிவு சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் 5,486 போலீசார் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விடுபட்டவர்கள் நாளை கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர் பகுதிகளில் உள்ள 2 தனியார் பள்ளிகள் மற்றும் ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 3 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நேற்று நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக முதன்மை தேர்வர்கள் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் வணிகப்பகுதி உள்ளடக்கிய தொலைத் தொடர்பு சேவையை BSNL வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மலை கிராமங்களுக்கு 4ஜி சேவை கோபுரங்கள் அமைக்கும் பணி தொடங்கியது. அதை தொடர்ந்து தமிழகத்தில் முதல் முறையாக வாழப்பாடி அருகே உள்ள சந்தமலையில் இன்று BSNL 4ஜி தொலைத்தொடர்பு கோபுரத்தை தமிழ்நாடு வட்டத்தின் பொது மேலாளர் தமிழ்மணி திறந்து வைத்தார்.
இளநீர் லோடுடன் இன்று சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், இளநீர் சாலையில் சிதறியது. இந்த விபத்தால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.