Salem

News April 17, 2024

ஜொலிக்கும் தீரன் சின்னமலை நினைவுத்தூண்

image

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த தினத்தையொட்டி இன்று சேலம் மாவட்டம், சங்ககிரியில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலையின் நினைவுத்தூண் அமைவிடம் நேற்று இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நினைவுத்தூணை கண்டு பொதுமக்கள் ரசித்தனர்.

News April 16, 2024

திமுகவில் இணைந்த தேமுதிக நகர செயலாளர்

image

ஆத்தூர் தேமுதிக நகர செயலாளராக சீனிவாசன் இருந்து வந்தார்.இந்த நிலையில் இன்று தேமுதிக கட்சியில் இருந்து விலகி சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். ஆர் சிவலிங்கம் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டார். அருகில் மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம் மற்றும் ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், விஜயபாஸ்கர் , கார்த்திக், விஜயகுமார் ,
ஆகியோர் உடன் இருந்தனர்.

News April 16, 2024

டெல்லி புறப்பட்ட ராஜ்நாத் சிங்

image

கிருஷ்ணகிரி, மற்றும் திருவண்ணாமலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்தார். பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டும், வாகனத்தில் சென்றபடியும் வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை சேலம் விமான நிலையத்திற்கு வந்தார். தொடர்ந்து 6.15 மணிக்கு தனி விமானத்தில் ஏறி டெல்லி புறப்பட்டு சென்றார்.

News April 16, 2024

அதிமுகவால் எம்பி ஆனவர் அன்புமணி – இபிஎஸ்

image

சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்ற பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் வேஸ்ட் என்கிறார் பாமக தலைவர் அன்புமணி; அதிமுகவிற்கு மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்ததால்தான் அன்புமணி எம்.பி. ஆனார். பாமக அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருக்கும். தற்போது பதவி வேண்டுமென கூட்டணி அமைத்துள்ளார் என கூறினார். 

News April 16, 2024

வாகனங்களில் GPS கருவி பொருத்தும் பணி 

image

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் GPS கருவி பொருத்தும் பணி, மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்ததை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, இன்று (16.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 16, 2024

சேலத்தில் இதுவரை ரூ.2.73 கோடி!

image

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாளே உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் வாகன சோதனை, கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை ரூ.2 கோடியே 73 லட்சம் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைகளில் இரு திசைகளிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் கண்காணிப்பு குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

News April 16, 2024

சேலம்: பதற்றமான இடத்தில் பலத்த பாதுகாப்பு

image

சேலம் மற்றும் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 12 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலத்தில் இருந்து ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News April 16, 2024

சேலம்: மாம்பழ வரத்து தொடங்கியது

image

சேலம் சந்தைக்கு மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் சேலம் பெங்களூரா , சேலம் குண்டு, இமாம் பசந்த் உள்ளிட்ட ரக மாம்பழ வரத்து தொடங்கியுள்ளது. தற்போது ஒரு டன் அளவில் மாம்பழ வரத்து உள்ள நிலையில் விரைவில் 5 டன் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒரு கிலோ மாம்பழம் ரகத்தை பொறுத்து ரூ.200 முதல் ரூ.280 வரை விற்பனை ஆகிறது.

News April 16, 2024

சேலம்: தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

image

சேலம் உருக்காலை திட்டத்திற்காக கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்டு மாற்று இடமாக வட்டமுத்தாம்பட்டி காமராஜ் நகரில் இடம் வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை கொடுக்கப்பட்ட இடத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே மக்களவை தேர்தலை புறக்கனிக்க போவதாக அப்பகுதி மக்கள் இன்று அறிவித்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

News April 16, 2024

சேலத்தில் 103.7 டிகிரி வெயில் பதிவு

image

அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே சேலத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்.15) 103.7 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கத்தினால் மதிய நேரத்தில் வெப்பத்தை தவிர்க்க பொதுமக்கள் தங்களது பயணங்களை தவிர்த்து வருகின்றனர். இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.