Salem

News April 18, 2024

வைரலாகும் வாக்குச்சாவடி திருவிழா அழைப்பிதழ்

image

இல்ல திருமணத்திற்கு வண்ணமயமான அழைப்பிதழ் அச்சிட்டு உறுப்பினர்களையும் நண்பர்களையும் அழைப்பது தமிழர் மரபு. நாளை (ஏப்.19) நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, ‘ஜனநாயக திருவிழா அழைப்பிதழ்’ என்ற பெயரில், திருமண அழைப்பிதழ் போல அச்சிடப்பட்ட அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த அழைப்பிதழுக்கு, நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து ‘கமெண்ட்’ செய்து பகிர்ந்து வருகின்றனர்.

News April 18, 2024

தேர்தல் இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

image

சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக., அதிமுக., பாமக., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 25 பேர் களத்தில் உள்ளனர். இத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இன்னும் இன்று ஒருநாள் மட்டுமே இருப்பதால் வாக்குப்பதிவிற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

News April 17, 2024

குழந்தைக்கு பெயர் சூட்டிய இபிஎஸ்

image

சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து, ஜலகண்டாபுரத்தில் நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஆண் குழந்தைக்கு ‘தீரன் ஆதித்யா’ என்று பெயர் சூட்டினார். இதில் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News April 17, 2024

இ.பி.எஸ். பங்கேற்கும் ரோடு ஷோ

image

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பிரம்மாண்ட ரோடு ஷோ இன்று சேலத்தில் நடைபெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு சேலம் அஸ்தம்பட்டியில் இருந்து டவுன் பகுதி வரை ரோடு ஷோ நடைபெறவுள்ளது.

News April 17, 2024

சேலம் வெப்பநிலை விவரம்

image

தமிழகத்தின் நேற்றைய (ஏப்ரல்.16) வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது, அதன் படி, சேலத்தில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

News April 17, 2024

சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் 

image

மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும் என சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News April 17, 2024

இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு? – இபிஎஸ்.

image

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன்
கூட்டணி வைத்து என்ன பயன் ? என்று இன்று சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை நகரில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார்.

News April 17, 2024

சலூன் கடைகாரர் மீது தாக்குதல்

image

சேலத்தை அடுத்துள்ள வீராணம் டி.பெருமாபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (34). இவர், அந்த பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடையை பூட்டும் நேரத்தில் இளைஞர் ஒருவர், குடிபோதையில் வந்து தனக்கு முடி வெட்ட வேண்டும் என கதிர்வேலுடன் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து
நட்ராஜ் (23) என்ற வாலிபரை கைது செய்தனர்.

News April 17, 2024

வெளியாட்கள் தொகுதியில் இருந்து வெளியேற உத்தரவு

image

சேலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிய உள்ள நிலையில், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். மேலும் திருமண மண்டபங்கள், தனியார் தங்கும் விடுதிகள் போன்றவற்றிலும் வெளிநபர்கள் யாரையும் தங்க வைக்க கூடாது என்றும் தேர்தல் விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

News April 17, 2024

டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

image

மக்களவைத் தேர்தலையொட்டி இன்று (ஏப்ரல்.17) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் இன்று அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மதுபானங்களை மதுப்பிரியர்கள் வாங்கிச் செல்கின்றனர்.