Salem

News April 19, 2024

சேலம்: 106.2 பாரன்ஹீட் வெயில்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல்-19) மாவட்டத்தில் அதிகபட்சமாக 106.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News April 19, 2024

சேலம் வாக்குப்பதிவு நிலவரம்

image

சேலம் மக்களவைத் தொகுதி பிற்பகல் 3 மணி நிலவரப்படி
ஓமலூர் 61.1%, சேலம் வடக்கு 54.8%, வீரபாண்டி 64.62%, சேலம் தெற்கு 56.6%, எடப்பாடி 65.57%, சேலம் மேற்கு 54.52% மொத்த 60.05% வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் வாக்களிக்க இன்னும் இரண்டு மணி நேரமே உள்ள நிலையில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

News April 19, 2024

திமுக வேட்பாளர் மலையரசன் வாக்களிப்பு

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன் இன்று தியாகதுருகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். மேலும் திமுக பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் கூறினார். பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு செலுத்த ஆர்வமாக வருகிறார் என்றும், திமுக வெற்றி பெறும் என்றும் கூறினார்.

News April 19, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 கன அடியாக குறைவு

image

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 55.620 அடியில் இருந்து 55.410 அடியாக குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 21.389 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 10 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்கு அணை மின் நிலையம் வாயிலாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக உள்ளது.

News April 19, 2024

கெங்கவல்லி: ஓட்டுபோட வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத்திற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி 250வது பூத்தில், இன்று அதே பகுதியை சேர்ந்த சின்ன பொண்ணு என்ற 77 மூதாட்டி வாக்கு செலுத்த வந்துள்ளார். அப்போது, உள்ளே நுழைந்து வாக்கு செலுத்த முயன்றபோது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 19, 2024

சேலம் மாநகராட்சி மேயர் வாக்களிப்பு

image

சேலம் மாநகராட்சி 6வது கோட்டம் சின்ன கொல்லப்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை சேலம் மாநகராட்சி மேயரும், அஸ்தம்பட்டி பகுதி செயலாளருமான ஆ.இராமச்சந்திரன் வாக்குப்பதிவு செய்தார். இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள், தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்பகுதியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

News April 19, 2024

சேலம்: வாக்கை செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி!

image

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது வாக்கை பதிவு செய்தார். பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளோடு சென்று வாக்களித்தார். 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப்.19) தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

News April 18, 2024

சேலம் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

சேலம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

சேலம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News April 18, 2024

விதிமீறல் புகார் மீது உடனடி நடவடிக்கை

image

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க ஏதுவாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு வரை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது புகார்களை 1800-425-7020 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணிலும், 0427-2450031,2450032, 2450034, 2450035, 2450046 ஆகிய தொலைபேசி எண்களிலும் மற்றும் 9489939699 என்ற எண்ணுக்கு whatsapp மூலம் தெரிவிக்கலாம்.