Salem

News December 29, 2024

சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில் இன்று ரத்து

image

தென்மத்திய ரயில்வே மண்டலத்திற்குட்பட்ட காசிபேட்- விஜயவாடா மார்க்கத்தில் மோட்டுமாரி ரயில்வே நிலையத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் வடக்கு- கோராக்பூர் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் (12512) இன்று (டிச.29) முழுமையாக ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 29, 2024

முருகனின் அறுபடை வீடு பயணம்: 55 பேர் விண்ணப்பம்

image

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், இலவசமாக அறுபடை வீடுகளுக்கு, அடுத்த ஆண்டு ஆயிரம் (60-70 வயதுள்ள) பக்தர்களை அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இருந்து, இதுவரை 55 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், வரும் டிசம்பர் 31ஆம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

News December 29, 2024

சேலத்தில் உலக அளவிலான போட்டி

image

தேசிய மற்றும் உலக அளவிலான மினி கோல்ப் போட்டி, சேலத்தில் இன்று முதல் ஜன.02 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான மைதானம் நேற்று (டிச.28) சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. இப்போட்டிக்கு இந்திய அளவில் மற்றும் உலக அளவில் உள்ள போட்டியாளர்களும் பங்கேற்க உள்ளனர். இப்போட்டி புனித ஜான்ஸ் நேஷ்னல் அகாடமி சார்பில், தமிழ்நாடு மினி கோல்ப் அசோசியேஷன் சார்பில் இந்த போட்டி நடைபெறுகிறது.

News December 29, 2024

ஓமலூர் அருகே மின்னொளி கைப்பந்து போட்டி 

image

சேலம் மாவட்டம், கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில், மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா முன்னிட்டு நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியை, காடையாம்பட்டி மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், ஏராளமான திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

News December 29, 2024

கவனம் பெற்ற புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி துணிகள்

image

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் கைத்தறி துறை சார்பில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி துணி ரகங்களான ஆரணி பட்டு சேலைகள், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், நெகமம் காட்டன் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள் உள்ளிட்டவை பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது.

News December 29, 2024

சேலம்:  இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (28-ம் தேதி) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News December 28, 2024

சேலம் மாநகர இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (டிச 28) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.

News December 28, 2024

சேலம் மருத்துவமனை மாநில அளவில் 3-ம் இடம்

image

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (டிச.27) நடந்த தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தில் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு ரத்தம் வழங்கிய தன்னார்வலர்கள்,தன்னார்வ அமைப்புகள்,கல்லூரி நிர்வாகத்தினரை பாராட்டி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் சான்றிதழ்களை வழங்கினார். ரத்ததானம் வழங்குவதில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மாநில அளவில் 3-ம் இடம் பெற்றது.

News December 28, 2024

25 ஆண்டுக்குப் பின் நிரம்பிய பாப்பான் ஏரி 

image

வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் 31.49 ஹெக்டேர் பரப்பளவில் பாப்பான் ஏரி உள்ளது. இந்த ஏரியில் நீர் வரத்து இன்றி வறண்டு புதராக காணப்பட்டது. இந்நிலையில் ஏரி பராமரிப்பு பணி நடந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, 25 ஆண்டுக்குப் பின் இன்று ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வாழப்பாடி விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News December 28, 2024

சேலத்தில் கொட்டப்போகுது மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இப்பகுதியில் நேற்று முதல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!