Salem

News March 18, 2025

ஒரு வாரத்தில் மட்டும் ரூ.3.53 லட்சம் அபராதம் விதிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரத்தில் 225 இடங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் 260 வாகனங்கள் மற்றும் 400 கடைகளிலும், 586 கல்வி நிறுவனங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூபாய் 3.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்.

News March 17, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாவட்ட ஊரக பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் காவல்துறையினர் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று மார்ச் 17 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்.

News March 17, 2025

சேலம்: கைதான பாஜகவினர் விடுதலை 

image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கைதை கண்டித்து  தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். தற்போது அண்ணாமலை விடுதலை செய்யப்பட்ட நிலையில் சேலத்தில் கைது செய்யப்பட்ட பாஜகவினர் அனைவரையும் போலீசார் விடுவிட்டனர். 

News March 17, 2025

சேலம் : ஆன்லைனில் வாங்குவோர் கவனத்திற்கு 

image

சேலம் : மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதுபடி இன்று(மார்ச் 17) அதிக தள்ளுபடி போன்ற விளம்பரங்களை நம்பி அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் விற்பனை தளங்களில், உங்களது வங்கி சார்ந்த தகவல்களை சேமித்து வைக்கவோ அவற்றை நம்பி உங்கள் பணத்தை இழந்து விடவோ வேண்டாம். என்கிற போஸ்டை காவல்துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News March 17, 2025

சேலம்: இன்றைய இரவு காவலர் ரோந்து பணியின் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (17.3-2025) இரவு 11 முதல் காலை 6 மணி வரை ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய உட் கோட்டாவில் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுபவர்கள் காவலரின் விவரங்கள் மேலே குறிப்பிட்ட உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் தங்களது அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்தில் அழைக்கலாம். தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

அதிமுக தீர்மானத்தை புறக்கணித்த பாமக எம்.எல்.ஏ 

image

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவினர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று(மார்ச் 17) சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் சேலம் மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் மற்றும் சேலம் மேற்கு எம்.எல்.ஏ அருள் ஆகிய இரண்டு பாமக எம்.எல்.ஏக்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்..

News March 17, 2025

சேலம்: ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம்

image

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது சுயவிவரக்குறிப்பு விவரத்தினை கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பலாம். மண்டல உதவி இயக்குநர் கலை பண்பாட்டு மையம், திருப்பதிகவுண்டனூர் சாலை ஆவின் பால் பண்ணை எதிரில், அய்யம்பெருமாம்பட்டி ,சேலம்-636302. மார்ச் 24யே விண்ணப்பிக்க கடைசி நாள் 

News March 17, 2025

சேலம்: பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை 

image

மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி சேலம் மாவட்ட ஆட்சியரை இன்று(மார்ச் 17) சந்தித்து காடையாம்பட்டி பகுதி சிறுவன் மீது நடைபெற்ற சாதி வெறி தாக்குதல் குறித்து மனு வழங்கினார்.மேலும், ‘இந்த திராவிட மாடல் அரசில் பட்டியல் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2026 தேர்தலில் பட்டியல் இன மக்களால் ஆட்சி மாற்றம் ஏற்படும். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு இழப்பீடு வழங்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்’ என்றார்

News March 17, 2025

சேலம்: குழந்தை திருமணம் செய்தால் இதான் தண்டனை 

image

குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.மேலும்,  குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரி, கிராம சபைக் கூட்டங்களில் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

News March 17, 2025

விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல்!

image

கோடை காலத்தைக் கருத்தில் கொண்டு குடிநீரை தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்திடத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் எவ்வித மின்தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்திட தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் தகவல்.

error: Content is protected !!