Salem

News January 4, 2025

பெரியப்பாவை கொன்ற கொடூரம்

image

புத்திரகவுண்டம் பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி (67) என்பவரை அவரது தம்பி சிகாமணியின் மகன் செல்வராஜ் (30) கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையில், செல்வராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மது போதையில் தனது சொந்த பெரியப்பாவை கழுத்தை வெட்டி கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News January 4, 2025

சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்

image

ஜன.04- ஆம் தேதி கயாவில் இருந்து கோவைக்கும், ஜன.07- ஆம் தேதி கோவையில் இருந்து கயாவுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (03679/03680) இயக்கப்படுகின்றன.சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

News January 4, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன 3) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News January 4, 2025

செல்லமா மாநகர இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜனவரி 3) இரவு ரோந்து  அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News January 3, 2025

சேலம் மாவட்டக் காவல்துறை அறிவுறுத்தல்

image

WhatsApp (அ) குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் APK-களை நிறுவுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம். அங்கீகரிக்கப்பட்ட, பாதுகாப்பான தளங்களில் இருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்யவும். ஆன்லைன் நிதி குற்றம் குறித்த புகாருக்கு 1930 என்ற எண்ணை அழைக்கலாம் என சேலம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News January 3, 2025

வார இறுதி நாள்: 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாளை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் ஜன.06- ம் தேதி வரை 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, ஓசூரில் இருந்து சேலம், கோவை, திருப்பூர், மதுரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

சேலம்: மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

image

சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள, எஸ்சி, எஸ்டி இனத்தைச் சார்ந்தவர்கள், தாட்கோ மூலம் விண்ணப்பித்து பயிற்சி பெறலாம். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும். எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள், தாட்கோவில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

News January 3, 2025

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு குரூப் 2 குரூப் 2ஏ பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் முன்னெடுப்பாக முன்னணி பயிற்சி நிறுவனம் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க உள்ளது. இதில் 21 முதல் 32 வயது நிரம்பிய எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விடுதியில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சி செலவின தொகையும் தாட்கோ வழங்கும் www.tahdco.com இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.

News January 3, 2025

இன்று முதல் பொங்கல் பரிசு டோக்கன்

image

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்பு அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. சேலத்தில் 10 லட்சத்து 77 ஆயிரத்து 575 குடும்ப அட்டைதாரர்கள், 983 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக இன்று முதல் 8ம் தேதி வரை நியாய விலை கடைகளில் டோக்கன் பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

சேலம் இரவு நேர ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

சேலம் மாநகர பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல் துறை சார்பில், தினமும் தொடர்ந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இன்று மாநகரப் பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

error: Content is protected !!