India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் பண்டிகை முதல் நாளில் போகி கொண்டாடப்படுகிறது. இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டில் உள்ள பழைய பொருட்களை வீதியில் போட்டு எரிப்பர். தற்போது வீட்டை சுத்தப்படுத்தி தேவையற்ற பொருட்களை குப்பையில் போடுகின்றனர். சேலம் மாநகராட்சியில் தினமும் 400 டன் குப்பை சேகரிக்கப்படும். போகி பண்டிகையில் சேர்ந்த கூடுதல் குப்பையால் நேற்று 500 டன் குப்பை சேகரிக்கப்பட்டது. இரு நாட்களுக்கு அதிக குப்பை சேகரமாகும்.
சேலம் மாநகராட்சியின் அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட ராஜகணபதி தெருவில் நாய் கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொங்கல் பண்டிகை அன்று நிகழ்ந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அச்சுறுத்தி வந்த நாயை பொதுமக்கள் அடித்தே கொன்றனர்.
“2025ம் ஆண்டை சிறப்பான ஆண்டாக அமைத்து, 2026 தைத்திருநாள், தி.மு.க.வை வேரோடு அகற்றும் நாளாக அமையும்; அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களால் வேளாண் தொழில் சிறந்து விளங்கியது. நானும் விவசாயி என்ற முறையில் மக்களோடு சேர்ந்து பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சி”- சேலத்தில் நடந்த பொங்கல் விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
பொங்கல், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நாளை (ஜன.15) திருவனந்தபுரம் வடக்கில் இருந்து பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக ரேணிகுண்டாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா இன்று சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித்ஆதித்ய நீலம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரப் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (50), சின்ன சீரகாபாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்ததாக கடந்த ஜன.10இல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகை இன்று (ஜன 14) கொண்டாடப்படுகிறது. மேலும், நாளை (புதன்கிழமை) மாட்டு பொங்கலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலத்தில் வசிக்கும் வெளியூர் மக்கள் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். ஆகையால் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் 900 போலீசார் குவிந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் கடைவீதி அருகே உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது மேலும் இன்று ரூ. 600 உயர்ந்து குண்டுமல்லி ஒரு கிலோ ரூ. 3,000-க்கு விற்கப்பட்டது. இதேபோல் முல்லை பூவும் கிலோ ரூ.3,000-க்கு விற்பனையாகிறது. பூக்கள் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) 8 மணி கன்னங்குறிச்சி பகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பொங்கல் விழா 2) காலை 9 மணி வீரபாண்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் விழா விழா 3) 10 மணி வள்ளுவர் சிலையருகே தமிழரன் மாணவர்கள் அமைப்பின் பொங்கல் விழா 4) காலை 10 மணி 9வது வட்டத்தில் திமுக சார்பில் பொங்கல் விழா
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 13 இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.