India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் விமானநிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையிலபொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கீர்த்திகரன் தலைமையிலான அதிகாரிகள், முதல்கட்டமாக எடுக்கப்படும் 177 ஏக்கரில் உள்ள கட்டிடங்கள், அதன் மதிப்புகள் ஆகியவைகளை அளவீடு செய்து மதிப்பிடும் பணியை நேற்று தொடங்கினர். இதில் வீட்டின் தரம்,மின்சாதன பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், மாட்டு கொட்டகைகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கான குறைதீர்க்க கூட்டம் வருகின்ற 29ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டங்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பிரிந்தா தேவி தெரிவித்துள்ளார்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜனவரி 23 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
நெசவுத் தொழிலுக்கான இயந்திர மானிய விலையில் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கைத்தறி துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 04272414745 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு இன்று காலை தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தெரிய வருகிறது. இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கட்டிடங்கள் அனைத்து பகுதிகளும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் ரூ.26.13 கோடியில் 3,944 வீடுகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 1,458 வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,486 வீடுகள் சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024-25 ஆம் நிதியாண்டிற்கு 20 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3,500 வீடுகள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு பெறப்பட்டு வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 1,737 ரேஷன் கடைகளிலும் இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரத்து 963 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 88.16% ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,27,563 கார்டுகளுக்கு வரும் ஜன.25 வரை பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர் படைப்பிரிவில் 24 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப, தகுதியான நபர்கள் வரும் ஜன.25-ல் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் தேர்வில் பங்கேற்கலாம்.10-ம் வகுப்பு கல்வி தகுதி,18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அரசின் உத்தரவுப்படி அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அரசின் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
குப்பம் ரயில் நிலையத்தில் பணிகள் காரணமாக, ஜன.24, பிப்.08 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக செல்லும் கன்னியாகுமரி- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் வடக்கு- மைசூரு ஜங்சன் எக்ஸ்பிரஸ் ரயில், ஜன.27, பிப்.03 ஆகிய தேதிகளில் மங்களூரு சென்ட்ரல்- யஷ்வந்த்பூர் ஜங்சன் ஆகிய ரயில்கள், மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் குப்பம் ரயில் நிலையம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.