India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூர் என்னும் இடத்தில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மோகனவல்லி சமேத கங்காதீஸ்வரர் ஆலயம் உள்ளது. பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக, அதாவது `அப்பு ஸ்தலமாக’ இந்த கோயில் இருப்பது மற்றுமொரு விசேஷமாகும். இந்த கோயில் பித்ரு தோஷம் நீக்குகின்ற, பெருநோய் சாபங்கள் நிவர்த்தி செய்கின்ற சக்தி வாய்ந்த பரிகார ஸ்தலம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஷேர் பண்ணுங்க.
ராணிப்பேட்டை காவல்துறை இன்று (ஆகஸ்ட் 5) சமூக வலைத்தளத்தின் விழிப்புணர்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்வது ஆபத்தானது எனவும், “பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் அடுத்த பேருந்திற்காக காத்திருங்கள்” என்ற வாசகத்துடன் செய்தி இடம்பெற்று இருந்தது. மக்களே யாரும் பேருந்து படியில் நின்று பயணம் செய்யாதீர்கள்! விழிப்போடு இருங்க!
ராணிப்பேட்டை மக்களே, இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு மேல்தான் <
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மொத்தம் 41 கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை முறையே அரக்கோணம்- 6, ஆற்காடு-7, கலவை-12, நெமிலி-5, சோளிங்கர்-3, வாலாஜா-10 ஆகும். இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கான நேர்காணல் செப்டம்பர் 16 முதல் 22 வரை நடைபெற உள்ளது. அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். கருத்து வேறுபாட்டால் பிரிந்து மாமனார் வீட்டில் வசிக்கும் மனைவியிடம் மது போதையில் தகராறு செய்தார். இதை அடுத்து ஆகஸ்ட் 3ம் தேதி நள்ளிரவு மாமனார் தட்சிணாமூர்த்தி உட்பட ஐந்து பேர் புருஷோத்தமனின் வீட்டுக்குச் சென்று கத்தியால் அவரை வெட்டினார்கள். நெமிலி போலீசார் வழக்குப் பதிந்து ஐந்து பேரையும் கைது செய்தனர்.
ராணிப்பேட்டையில் இன்று (ஆக. 04) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
ராணிப்பேட்டை ஓச்சேரியில் சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பொதுவாக காமாட்சி அம்மனை நாம் அமர்ந்த கோலத்தில் தரிசித்து இருப்போம், ஆனால் இந்த கோயிலில் தாமரை மலரில் நின்று காட்சி தருகிறார் . குழந்தை வரனுக்காக காத்திருப்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வேண்டினாள் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை செல்வத்துக்காக காத்திருப்பவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஜூலை 15 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் உலக இளைஞர் திறன் தின நாள் மாவட்டம் முழுவதும் கொண்டாட உள்ளதாக ஆட்சியர் ஜெ.யூ. சந்திரகலா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தை இந்த விழிப்புணர்வு வாரமாக அனுசரித்து கொண்டாட உள்ளது என்றும் தெரிவித்தார்.
▶ராணிப்பேட்டையில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.