Ranipet

News October 28, 2024

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

image

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கீழ்கண்டவாறு எடுக்கப்பட்டது. நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளது என்று உறுதிமொழி ஏற்றனர்.

News October 28, 2024

PMKISAN ரூ.2000 உதவித்தொகை அறிவிப்பு

image

PM கிசான் திட்டத்தில் பெயர் பதிவிட்டும் உங்களுக்கு தவணை வரவில்லை என்றால் உடனே புகார் அளிப்பதன் மூலம் விரைவில் உங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். PM கிசான் “HELPLINE TEST” மூலம் நீங்கள் புகார் அளிக்கலாம். மேலும், pmkisan-ict@gov.in. w pmkisan-funds@gov .in. என்ற மின்னஞ்சல் ID மூலமும் புகார் தெரிவிக்கலாம். மாவட்டம் ஆட்சியர் யு. சந்திரகலா மற்றும் வேளாண்மை இயக்குநர் செல்வராஜ் தெரிவித்தனர்.

News October 28, 2024

ராணிப்பேட்டை ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை பயிர் சேதத்தை தடுக்க மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவ மழையின் போது பயிர்களை காக்க வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன அதனை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தாத விவசாயிகள் இ-சேவை மையம் மூலம் நவ.15ஆம் தேதிக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

News October 28, 2024

10 கிராமங்களுக்கு 10 மின்கல வாகனங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் ரூ.25.40 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகள் சேகரிக்கும் 10 மின்கல வாகனங்களை 10 கிராம ஊராட்சிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்க வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, சோளிங்கர் MLA முனிரத்தினம் இன்று தொடங்கி வைத்தனர்.

News October 28, 2024

ரேஷன் கடைகளுக்கு நவ.16ஆம் தேதி விடுமுறை

image

தீபாவளி பண்டிகையையொட்டி அக்.27ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கூறியிருந்தார். இந்நிலையில், இந்த விடுமுறை நாளில் பணியாற்றுவதற்கு நவ.16ஆம் தேதி அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2024

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் 263 பணியிடங்கள்

image

ராணிப்பேட்டையில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நவ.8ஆம் தேதிக்குள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

News October 27, 2024

அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து

image

ஆற்காட்டில் இருந்து முள்ளண்டிரம் கிராமத்திற்கு திமிரி அடுத்த நம்பரை கிராமம் வழியாக அரசு டவுன் பஸ் இன்று சென்று கொண்டிருந்தது. இந்த டவுன் பஸ் நம்பரை அருகில் செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

News October 27, 2024

ராணிப்பேட்டை மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (27.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100 அழைக்கலாம்.

News October 27, 2024

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் பரிசு அறிவிப்பு

image

இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. முதல் பரிசாக ரூ.1,00,000, 2-வது பரிசாக ரூ.60,000, 3-வது பரிசாக ரூ.40,000 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி பூர்த்தி செய்து தருமாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் சுமிதா நெமிலி அவர்கள் தெரிவித்தார்.

News October 27, 2024

 ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

image

அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.