Ramanathapuram

News April 20, 2024

பலாப்பழத்துடன் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ் மகன்

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் முதல்வர் OPS-இன் இளைய மகன் ஜெயபிரதீப் நேற்று (ஏப்ரல் 19) தனது தந்தையின் சின்னமான பலாப்பழத்துடன் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில், சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார். திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் உடையத்தேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News April 20, 2024

சென்னை மொபைல்ஸ் குழும தலைவர் வாக்களிப்பு

image

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 19) காலை ஆறு மணி முதல் தொடங்கி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நடந்த வாக்குப்பதிவில் பிரபல தொழிலதிபர் சென்னை மொபைல்ஸ் குழும தலைவர் முகமது ரபிகுதீன் திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தெற்குத்தரவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

News April 19, 2024

வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு ஓபிஎஸ்

image

2024 மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருவதை முன்னிட்டு பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சௌராஷ்ட்ரா ‌மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். உடன் எம்பி தர்மர் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

News April 19, 2024

ராமநாதபுரம்: 63.35 சதவீத வாக்குகள் பதிவு

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளின்படி மொத்தம் 63.35% வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 60% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 19, 2024

ராமநாதபுரம் தொகுதி முழுவதும் 40.90% வாக்கு பதிவு!

image

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இன்று (ஏப்ரல் 19) நடைபெறும் பொதுத்தேர்தலில் இன்று மதியம் 1 மணி நிலவரப்படி சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
அறந்தாங்கி: 42.74%
பரமக்குடி (தனி ): 42.14%
திருவாடனை : 40.50%
இராமநாதபுரம் : 36.39%
முதுகுளத்தூர் : 39.90%
திருச்சுழி : 46.25%
தொகுதி முழுவதும் 
சராசரி :  40.90 % ஆகும்.

News April 19, 2024

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி ஒரு மணி நிலவரம்

image

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி நண்பகல் 1 மணிவரை வாக்குப்பதிவு விவரம்: (சட்டமன்ற தொகுதி வாரியாக)
அறந்தாங்கி : 42.74 சதவீதம்
பரமக்குடி (தனி ) : 42.14 சதவீதம்
திருவாடனை : 40:50 சதவீதம்
இராமநாதபுரம் : 36.39 சதவீதம்
முதுகுளத்தூர் : 39.90 சதவீதம்
திருச்சுழி : 46.25 சதவீதம்
சராசரி : 40.90 சதவீதம். வாக்குப்பதிவு காலை முதல் தொடர்ந்து அமைதியாக நடைபெற்று வருகிறது.

News April 19, 2024

ஜனநாயக கடமை ஆற்றிய ராமநாதபுரம் கலெக்டர் 

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷ்ணு சந்திரன் இன்று தனது வாக்கினை ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் பதிவு செய்தார். பின்னர் பொதுமக்கள் அனைவரும் இன்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

News April 19, 2024

ராமநாதபுரம்: நவாஸ் கனி எம்பி வாக்களிப்பு

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி, அறந்தாங்கி என 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,934 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, கடலாடி ஊராட்சி ஒன்றிய குருவாடி துவக்கப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

News April 19, 2024

ஆர்வமுடன் வாக்களிக்க சென்ற மாற்றுத்திறனாளி முதியவர்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாடானை சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவாடானை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிப்பதற்காக மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் தனது பேரனுடன் ஆர்வமாக காலையிலேயே வாக்களிக்க சென்றார்.

News April 18, 2024

ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.