Ramanathapuram

News April 27, 2024

இராமநாதபுரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

இராமநாதபுரத்தில் கோடை காலம் துவங்கியதை அடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News April 27, 2024

ராமநாதபுரம்; புல்லட் மோதியதில் பெண் படுகாயம்!

image

ராமநாதபுரம் மாவட்டம் முதலூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி மனைவி மலர்விழி(59), தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று மாலை காருகுடி பஸ் ஸ்டாப்பில் சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதியில் வந்த புல்லட் பைக் பலமாக மோதியதில் படுகாயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர் காந்தி புகாரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்

News April 27, 2024

வெறி நாய் கடித்து காயம் – 8 பேர் அனுமதி

image

திருவாடானையில் நேற்று( ஏப்ரல். 26) தெருவில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்றவர்களை கடித்துத் குதறியுள்ளது. இதில் திருவாடானை அருகே உள்ள திருவடிமிதியூர் கிராமத்தைச் சேர்ந்த பாப்பு(65), திருவாடானை சமத்துவபுரம் வளர்மதி(30), ஈரோட்டைச் சேர்ந்த ரெங்கநாதன்(38) உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

News April 26, 2024

ராமநாதபுரம் அருகே கடையடைப்பு

image

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊர் நல கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. வர்த்தக சங்க தலைவர் நிஜாமுதீன் தலைமை வகித்தார். தங்கச்சிமடம் மக்களை புறக்கணிக்கும் மின் வாரியத்தை கண்டித்து மே 7ல் தேதி தங்கச்சிமடத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி ஏற்பாடு செய்தார்.

News April 26, 2024

மாம்பழ கடைகளில் அதிகாரிகள் சோதனை

image

ராமநாதபுரத்தில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். செயற்கை முறையில் பழுக்க வைத்து உள்ளனரா என்று கண்டறிய மாம்பழங்களை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

News April 26, 2024

ரூ. 9 ஆயிரம் லஞ்சம் – சிக்கிய அதிகாரிகள்

image

தேவிபட்டினம் சேர்ந்த முகமது பிலால் என்பவர் வீட்டின் மேல் செல்லும் மின்கம்பியை மாற்றியமைக்க தேவிபட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் பணம் கட்டி மனு செய்தார். இதற்கு வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு, வயர்மேன் கந்தசாமி, உதவி மின் பொறியாளர் செல்வி ஆகியோர் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து இன்று விசாரித்து வருகின்றனர்.

News April 26, 2024

கடல்நீரை குடித்த மான் சாவு

image

தொண்டி அருகே காட்டுப்பகுதிகளில் மான்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. நேற்று புள்ளிமான் ஒன்று தொண்டி புதுக்குடி மீனவ கிராமத்திற்க்குள் இரை தேடிச் சென்றுள்ளது. அங்கு கடல் நீரை குடித்த மான் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் உடற்கூறுறாய்வுக்கு பின்னர் மானை புதைத்தனர்.

News April 25, 2024

ராமநாதபுரம் அருகே விபத்து 

image

ராமநாதபுரம்: பட்டினம்காத்தான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் மகன் கார்த்தி(33). இவர் மோட்டார் சைக்கிளில் இன்று மாலை பட்டிணங்கத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 25, 2024

ராமநாதபுரம் – பெருமைமிகு கலாமின் நினைவகம்!

image

அப்துல் கலாம் நினைவகம் 2.11 ஏக்கர் பரப்பளவில் ராமேஸ்வரத்தில் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக 2015 -17ஆம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவகத்தில் ஏவுகணை நாயகனாக அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறும், அவரின் கண்டுபிடிப்புகளும் விளக்கும் வகையில் உள்ளது. ஏவுகணைகள், அரிய ஓவியங்கள், கலாமின் உடமைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நூலகம் கோளரகம், பூங்கா அமைதியான சூழலை ஏற்படுத்துகிறது.

News April 25, 2024

நீர், மோர் பந்தல் திறப்பு

image

பரமக்குடியில் அதிமுக சார்பில் இன்று பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட ஜெயபெருமாள் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்தையா மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.