India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் உள்ள எஸ். தாரைக்குடி ஊராட்சியில் இன்று (டிச.14) மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அவருடன் அரசு அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானிலை மிக மோசமாக உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. மீன் பிடி அனுமதி சீட்டு மறுக்கப்பட்ட நிலையில், அனுமதி சீட்டு இல்லாமல் கடலுக்கு சென்ற மணிவண்ணன் என்பவரது விசைப்படகின் அடிப்பகுதி பலகை பெயர்ந்து கடலில் மூழ்கியது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் சக மீனவர்கள் அவர்களை மீட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்குளம் ஊராட்சி கே. கரிசல்குளம் கிராமத்தில் குடியிருந்து வரும் விவசாயி வேல்முருகன் என்பவரின் ஓட்டு வீட்டின் ஒரு பக்கவாட்டு சுவர் இன்று இரவு (டிச.13) இடிந்து விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சம்பவ இடத்தில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.
பரமக்குடி அருகே மேலாய்குடியில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையில் இன்று அதிகாலை பால்ராஜ் என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பால்ராஜின் ஆறு வயது மகள் கீர்த்திகா சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் இயற்கை பேரிடர் மேலாண்மை மீட்பு நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெற்றோரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.
பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழையில் மேலாய்க்குடி யாதவர் தெருவில் இன்று(டிச.13) காலை பால்ராஜ் என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பால்ராஜின் மகள் கீர்த்திகா சம்பவ இடத்திலேயே பலியானார். சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி மேலாய்குடி அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று(டிச.12) பெரும்பான்மையான இடங்களில் கனமழை பெய்தது. வாலிநோக்கம், பரமக்குடி, ஏர்வாடி,கீழக்கரை ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அதில் இராமநாதபுரத்தில் அதிகபட்சமாக கமுதியில் 170 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
ராமநாதபுரத்தில் இன்று (12.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டபம் மேற்கு வாடி வடக்கு கடற்பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி ராமநாதபுரத்தில் மீனவர் நலத்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணனிடம், மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் பாலசுப்ரமணியன், செயலர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் இன்று கோரிக்கை மனு அளித்தனர். அதில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மீனவர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதன் காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2025 இல் 6 நாள் தொடர் முறை வருகிறது. ஜன.11 இரண்டாவது சனி, ஜன 12 ஞாயிறு, ஜன 13 ஆருத்ரா தரிசனம் (உள்ளூர் விடுமுறை, இதற்கு ஜன 25ல் ஈடுகட்டும் பணி ), ஜன.14 பொங்கல், ஜன 15 உழவர் திருநாள், ஜன 16 திருவள்ளுவர் தினம் என 6 நாட்கள் விடமுறையாக வருகிறது.
Sorry, no posts matched your criteria.