India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமேஸ்வரத்தில் இருந்து(டிச.14) மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் மணிவண்ணன் என்பவரது விசைப்படகு 3 கடல் மைல் துாரம் சென்ற போது சூறாவளி வீசியதால் கடல் கொந்தளிப்பில், படகில் கடல்நீர் புகுந்ததால் படகு கடலுக்குள் மூழ்க துவங்கியது. அவ்வழியாக வந்த மற்றொரு படகு மீனவர்கள், உயிருக்கு போராடிய 7 மீனவர்களை மீட்டு ராமேஸ்வரம் கரைக்கு கொண்டு வந்தனர். மூழ்கிய படகை மீட்க ஓரிரு நாளில் மீன்வளத்துறை மூலம் மீட்க முயற்சி.
இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சியானது உருவாகியுள்ளது. இச்சுழற்சி வலுப்பெற்று டிச.17ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியை நோக்கி நகரும். இந்தப் புதிய காற்றழுத்த சுழற்சியால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவாடானை தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வும் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாடு ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரான கப்பலூர் கே.ஆர். ராமசாமி இன்று (டிச.15) சென்னையில் மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் ஈவிகேஎஸ் முதுபெரும் காங்கிரஸ் தலைவர் என்றும், தன்மானத்துடன் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு அயராது உழைத்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சீரமம் அடைந்தனர். இந்நிலையில், கருமொழி கிராமத்தை சேர்ந்த லட்சுமி, மச்சூரை சேர்ந்த அக்பர் அலி, பண்ணவயலை சேர்ந்த நாகரத்தினம் ஆகியோரின் வீடுகள் சேதமடைந்தது.
ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மெஹ்பூப் அலிகான் தலைமை வகித்தார். நீதிபதிகள் கவிதா, மோகன்ராம், அகிலா தேவி, பிரசாத், நிலவேஸ்வரன், பிரபாகரன், வெர்ஜின் வெஸ்டா வழக்கறிஞர் சங்க தலைவர் ஷேக் இப்ராஹிம் பங்கேற்றனர் . 3,468 வழக்குகள் பரிசீலினைக்கு எடுக்கப்பட்டு தீர்வு கண்ட 999 வழக்குகளுக்கு ரூ.7,80,30,350 நிவாரண தொகை வழங்கப்பட்டது.
தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் இயற்றப்பட்ட 1956 டிச.27ஐ நினைவு கூறும் ஆட்சி மொழி சட்ட வார விழா இந்தாண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.18 – 27 வரை ஒரு வார காலம் நடக்கிறது. இந்த நாட்களில் அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்களில் ஒட்டு வில்லைகள் ஒட்டியும் துண்டறிக்கைகள், அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப்பலகை தொடர்பான அரசாணை வழங்கியும் கொண்டாடப்பட இருப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் 25வது மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டி தேவி பட்டினம் ரோடு செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நாளை (டிச.15) காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. திரைப்பட நடிகர் அருண்மொழி தேவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். இத்தகவலை ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் உள்ள எஸ். தாரைக்குடி ஊராட்சியில் இன்று (டிச.14) மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அவருடன் அரசு அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானிலை மிக மோசமாக உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. மீன் பிடி அனுமதி சீட்டு மறுக்கப்பட்ட நிலையில், அனுமதி சீட்டு இல்லாமல் கடலுக்கு சென்ற மணிவண்ணன் என்பவரது விசைப்படகின் அடிப்பகுதி பலகை பெயர்ந்து கடலில் மூழ்கியது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் சக மீனவர்கள் அவர்களை மீட்டனர்.
Sorry, no posts matched your criteria.