Ramanathapuram

News December 17, 2024

வீட்டில் பதுக்கிய 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

image

இலங்கைக்கு கடல் வழியாக கடத்த மண்டபம் அருகே வேதாளையில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் வடிவேல் முருகனுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி மண்டபம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலமுருகன் மண்டபம், பாம்பன் உச்சிப்புளி தனிப்பிரிவு காவலர்கள் பாரதி, கேசவன் கார்வண்ணன் ஆகியோர் வேதாளை தெற்கு தெரு ராஜா முஹமது வீட்டில் பதுக்கிய 450 கிலோ கடல் அட்டையை இன்று பறிமுதல் செய்தனர்.

News December 17, 2024

2 நாட்கள் காவிரி குடிநீர் விநியோகம் ரத்து 

image

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), புனரமைப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பு III & V பிரதான குழாய்களை இணைக்கும் பணி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.19, 20 ஆகிய 2 தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News December 17, 2024

நடிகை கவுதமியிடம் மோசடி செய்தவர் கைது

image

நடிகை கவுதமியிடம் உதவியாளராக இருந்த பைனான்சியர் அழகப்பன், கவுதமிக்கு முதுகுளத்தூரில் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.3.16 கோடி வாங்கி ஏமாற்றியுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு போலீசார் அழகப்பனை கைது செய்தனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அழகப்பனின் உறவினர் சென்னை பூந்தமல்லி குமரப்பன் மகன் பாஸ்கர்(50) என்பவரை சென்னையில் நேற்று முன்தினம்(டிச.15) கைது செய்தனர்.

News December 17, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு 

image

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 20.12.2024 காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சார்ந்த பொருள்களை விவாதிக்கலாம். விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

இரவு ரோந்து அதிகாரியின் விவரம் வெளியீடு

image

இராமநாதபுரத்தில் இன்று (16.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 16, 2024

ராமேஸ்வரம் – இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து

image

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக 3 நாள் அரசு விடுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்‌. அவர் அதிபரான முதல் வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும். இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்தியாவின் பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என இருவரின் சந்திப்பிற்கு பிறகு பிரதமர் மோடி  அறிவித்துள்ளார்.

News December 16, 2024

மீனவர் பிரச்னைக்கு தீர்வுகான கடிதம்

image

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகரிடம் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார். இருநாட்டு மீனவர்களுக்கு இடையான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கிடவும், சுமுகமான முடிவு எட்டப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

மண்டபத்தில் தென் கடல் படகுகள் தொழிலுக்கு செல்ல அனுமதி

image

மண்டபம் தென் கடலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகளுக்கு நாளை (டிச.17) மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும். கடலுக்கு செல்லும் மீனவர்கள் உயிர் காப்பு மிதவை, படகு பதிவு, காப்பீடு சான்று, மீன்பிடி உரிமம், மீனவர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

கூலித் தொழிலாளியின் மகள் துணை ராணுவப்படைக்கு தேர்வு

image

முதுகுளத்தூர் அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம், செல்வி தம்பதியர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் தரணி அண்மையில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை இந்திய துணை ராணுவப் படை பணிக்கு தேர்வாகியுள்ளார். கிராமத்தின் முதல் முறையாக மத்திய அரசு பணியில் சேர்ந்த பெண்ணுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிலையில் பணி உத்தரவு கடிதம் புகைப்படத்துடன் பிளக்ஸ், பேனர் அடிக்கப்பட்டுள்ளது.

News December 16, 2024

ராமநாதபுரம் பொறியாளரிடம் ரூ.18 லட்சம் மோசடி

image

மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி தங்கராஜ். இவரிடம் வாட்ஸ்அப்பில் ஆன்லைன் பங்கு வர்த்தகம் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என மோசடி நபர்கள் கூறியுள்ளனர். இதை நம்பி குழுவில் பங்கு வர்த்தகம் மேற்கொண்ட தங்கராஜிடம் இருந்து பணம் பெற்று ரூ.18 லட்சம் மோசடி செய்தனர். தங்கராஜ் அளித்த புகாரின்படி ராமநாதபுரம் சைபர் க்ரைம் போலீசார் மோசடி நபர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் பணத்தை முடக்கியுள்ளனர்.

error: Content is protected !!