Ramanathapuram

News May 16, 2024

2 மணி நேர மழை: சாலையில் தண்ணீர் தேக்கம்

image

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் கரு மேகங்கள் திரண்டு மழை பெய்யத் துவங்கியது. இதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மண்டபம் விலக்கு, ஏழு கடை வீதி, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

News May 16, 2024

ராம்நாட்டுக்கு ரெட் அலர்ட்!

image

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

ஹெல்மெட் அணியாத போலீசார் மீது நடவடிக்கை

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாவட்ட எஸ்பி சந்தீஷ் உத்தரவிட்டுள்ளார். இராமநாதபுரம், கமுதி ஆயுதப்படைகளுக்குள் டூவிலரில் செல்லும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லாவிட்டால் நோட்டீஸ் வழங்கி ஆயுதப்படை குடியிருப்பில் இருந்து கால் செய்யப்படுவார்கள். அதே போன்று சட்டம்- ஒழுங்கு போலீசாரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவும் உத்தரவிட்டுள்ளார்.

News May 16, 2024

ராமநாதபுரம் மழைக்கு வாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

ராமநாதபுரம்: மின்தடை அறிவிப்பு ரத்து

image

கமுதி துணைமின் நிலையத்திற்குட்பட்ட பார்த்திபனூர், அபிராமம், முதுகுளத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு நடைபெறவுள்ளதால் இன்று (மே 16) மின்தடை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வானிலை திடீர் மாற்றம் காரணமாக மின் தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுடிமன்னார்கோட்டை பகுதியில் அரசு நலத்திட்டம் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அவர்கள் கீழமுடிமன்னார்கோட்டை பகுதிக்கு சென்று வளர்ச்சி பணிகளை குறித்து ஆய்வு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

News May 15, 2024

ராமநாதபுரம் : நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

ராமநாதபுரம் மழைப்பொழிவு விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தங்கச்சிமடம் பகுஹ்டியில் 5செ.மீட்டரும், முதுகுளத்தூர், தொண்டி ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும், ஆர்.எஸ். மங்கலம், கடலாடி ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 15, 2024

குடிபோதையில் குளிக்க சென்றவர் கண்மாயில் மூழ்கி சாவு

image

ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் அருகே உள்ள யேலூர் கிராமத்தை சேர்ந்த ராசு என்பவரது மகன் ரமேஷ் (43). இவர் நேற்று பண்ணைவயல் அத்தானி கண்மாய் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு குடிபோதையில் கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். இவரது மனைவி பரிமளா (33) கொடுத்த புகாரில் திருவாடானை போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 15, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் தமிழக தேர்தல் அதிகாரி ஆய்வு

image

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொதுத்தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த இயந்திரங்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன், எஸ்பி சந்தீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.