Ramanathapuram

News January 1, 2025

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டி

image

மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஈசிஆர் சாலையில் 05/01/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் போட்டி நடைபெற உள்ளது.04/01/2025 மாலை 5மணிக்குள் மாவட்ட சீதாக்காதி விளையாட்டரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு இலவசம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித் சிங் காளோன் தெரிவித்துள்ளார். *ஷேர் செய்ய்வும்*

News January 1, 2025

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த எம்பி

image

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு நேற்று முடிந்து இன்று 01.01.2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இதனையடுத்து இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவருமான நவாஸ்கனி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

சாலையில் கவிழ்ந்த ஐயப்ப பக்தர்கள் வாகனம்

image

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நேற்று புறப்பட்ட ஐயப்ப பக்தா்கள் குழுவினரின் சுற்றுலா பேருந்து திருச்சி – ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஆா்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம் கிராமத்தில் நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி சுற்றுலா பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் மூவர் காயமடைந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். போலீசார் வழக்குபதிவு செய்தனர்

News December 30, 2024

ராமநாதபுரத்தில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம் 

image

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற அரசு உதவி பெறும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை இன்று தூத்துக்குடியில் முதல்வர் தொடங்கிவைத்தார். அதைதொடர்ந்து இராமநாதபுரத்தில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

News December 30, 2024

ராமநாதபுரத்தில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம் 

image

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற அரசு உதவி பெறும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை இன்று தூத்துக்குடியில் முதல்வர் தொடங்கிவைத்தார். அதைதொடர்ந்து இராமநாதபுரத்தில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

News December 30, 2024

சீசனை முன்னிட்டு ஆமை குஞ்சு பொரிக்கும் மையங்கள்

image

மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் ஆமை முட்டைகளுக்கான குஞ்சு பொரிப்பகம் அமைக்கப் பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை பச்சையாமை, பேராமை, சித்தாமை ஆகியவை வாழ்கின்றன. டிசம்பர், கடைசி வாரம் முதல் ஜன வரி, பிப்ரவரி மாதங்களில் ஆமைகள் கடற்கரையோ ரங்களில் முட்டையிட்டு செல்கின்றன. கீழக்கரை, சாயல்குடி வனச்சரகத் திற்கு உட்பட்ட 6 இடங் களில் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.என்றனர்

News December 30, 2024

ராம்நாடு இரவு ரோந்து போலீசார் விவரம்

image

இன்று (29.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 29, 2024

இராமநாதபுரத்தில் பொது ஏலம் அறிவிப்பு!

image

இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இராமநாதபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகின்ற நாளை (30.12.2024) காலை 10.00 மணியளவில் கேணிக்கரை காவல் நிலையம் அருகில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு 8438939372 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 29, 2024

முதுகுளத்தூரில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி

image

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் இன்று(டிச.29) 110 SPORTS ACADEMY மற்றும் வில்வா பேட்மிண்டன் கிளப் நண்பர்கள் நடத்தும் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் டிஎஸ்பி சின்னக்கண்ணு, வட்டாட்சியர் சடையாண்டி சேர்மன் ஷாஜகான், அப்துல் ரகீம், காதர் முகைதீன், துறைப்பாண்டியன், ரமேஷ்குமார், முகமது இக்பால், இராமபாண்டியன், ஜஹீபர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News December 29, 2024

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

பரமக்குடியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 4.1.2025 சனிக்கிழமை நடைபெறுகின்றது.
காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
பரமக்குடியில் மதுரை – மண்டபம் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் அரசு ஐ.டி.ஐ அருகில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் அனுமதி இலவசம்.  தங்களது பயோடேட்டா, ஆதார் கார்டு அவசியம். *ஷேர் செய்யவும்*

error: Content is protected !!