Ramanathapuram

News January 3, 2025

இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

image

ராமநாதபுரத்தில் சுமார் 398982 அரிசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப்பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும் இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர். *ஷேர்*

News January 3, 2025

இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

image

ராமநாதபுரத்தில் சுமார் 398982 அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

News January 2, 2025

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா

image

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 14, 15இல் நடைபெறும் என யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானபிரகாசம் தெரிவித்துள்ளார். மார்ச் 14 மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கிறது. அதைத் தொடர்ந்து ஜெபமாலை, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை, இரவு தேர் பவனி நடைபெற உள்ளது. மார்ச் 15 காலை 7:30 மணியளவில் சிறப்பு திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

News January 2, 2025

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு

image

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 16 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://ramanathapuram.nic.in/என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து பூர்த்தி செய்யப்பட்டு விண்ணப்பத்தினை இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் 26.12.2024 முதல் 09.01.2025குள் சமர்ப்பிக்கவும். *ஷேர்*

News January 2, 2025

ராமநாதபுரம் மருத்துவமனையில் தீ விபத்து

image

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் ஏற்பட்ட மின் கசிவால் 2வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகள் பாதுகாப்பாக முதல் தளத்துக்கு அழைத்து வந்தனர். வாலாந்தரவை விலக்கில் நேற்றிரவு விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் தீ விபத்து காரணமாக சிகிச்சையளிக்க முடியாமல் 3 பேர் பலியாகினர்.

News January 1, 2025

இரவு ரோந்து அதிகாரியின் விவரம் வெளியீடு

image

இன்று (01.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 1, 2025

பேரூராட்சிகளாக தரம் உயரும் ஏர்வாடி, தேவிபட்டினம் ஊராட்சிகள்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், ஆர் எஸ் மங்கலம், தொண்டி, சாயல்குடி, அபிராமம், கமுதி, முதுகுளத்தூர் என 7 பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில் ராமநாதபுரம் ஒன்றியத்தில் 11,599 மக்கள் தொகை கொண்ட தேவிபட்டினம் ஊராட்சி, கடலாடி ஒன்றியத்தில் 13,366 மக்கள் தொகை கொண்ட ஏர்வாடி ஊராட்சி பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்கிறது.

News January 1, 2025

சுந்தர் ராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவ விழாவை யொட்டி இன்று இரண்டாம் நாள் விழாவையொட்டி சுந்தர் ராஜா பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம், திருவாய் மொழி பாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பெருமாளை வணங்கிச் சென்றனர்.

News January 1, 2025

ரகசிய கேமரா விவகாரம்: உடை மாற்றும் அறைக்கு சீல்

image

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரத்தில் வழக்குப் பதிந்து ராஜேஷ்கண்ணன், மீரா மைதீன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், 90-க்கும் மேற்பட்ட விடியோ பதிவுகளையும் கைப்பற்றினா். இந்நிலையில், ராமேசுவரம் கோயில் காவல் நிலைய ஆய்வாளா் முருகேசன், கிராம நிா்வாக அலுவலா் ரோட்ரிகோ ஆகியோா் தேநீா் கடை, உடை மாற்றும் அறை ஆகியவற்றுக்கு ‘சீல்’ வைத்தனா்.

News January 1, 2025

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டி

image

மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஈசிஆர் சாலையில் 05/01/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் போட்டி நடைபெற உள்ளது.04/01/2025 மாலை 5மணிக்குள் மாவட்ட சீதாக்காதி விளையாட்டரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு இலவசம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித் சிங் காளோன் தெரிவித்துள்ளார். *ஷேர் செய்ய்வும்*

error: Content is protected !!