India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கை கல்பட்டி கடல் பகுதியில் இலங்கை பதிவு எண் கொண்ட பிளாஸ்டிக் படகு ஒன்று சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்று கொண்டு இருந்தது. உடனே அந்த படகை மடக்கி சோதனை செய்த போது 11.5 கிலோ தங்கக்கட்டிகள் ராமேஸ்வரத்துக்கு கடத்த முயற்சி நடந்துள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை இலங்கை போலிசார் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் ஆளிநர்களாக இருந்து உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற 20 காவல் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் இன்று காவல்துறை கூட்டரங்கிற்கு நேரில் அழைத்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு ஜன.11 முதல் ஜன.19 வரை தொடர் விடுமுறை நாட்களாகும்? ஜன.11 இரண்டாவது சனி, ஜன.12 ஞாயிறு, ஜன.13 ஆருத்ரா தரிசனம் (உள்ளூர் விடுமுறை), ஜன.14 பொங்கல், ஜன. 15 மாட்டுப் பொங்கல், ஜன.16 உழவர் தினம், ஜன.17 அரசு விடுமுறை அறிவிப்பு, ஜன.18 சனி, ஜன.19 ஞாயிறு என தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை வருகிறது. ஜன.13 உள்ளூர் விடுமுறை ஜன.25 ஈடுகட்டும் பணி நாளாகும்.
இன்று (04.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலை கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் 149 முன்னணி நிறுவனங்கள் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 524 பேருக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பணி நியமன ஆணை வழங்கினார். பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் திருவிழா விமர்சியாக நடைபெறும். இந்நிலையில் இன்று (ஜன.4) கோவிலின் வடக்கு மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள நடராஜருக்கு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. இதில் தினமும் காலை மாலை மாணிக்க வாசகர் தங்ககேடயத்தில் புறப்பாடாகி மூன்றாம் பிரகாரத்தில் சுற்றி வலம் வருவார். ஜனவரி 13 அன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆரில், 15 வயதிற்குட்பட்ட மாணவருக்கு 15 கி.மீ, மாணவியருக்கு 10 கி.மீ, 17 வயதிற்குட்பட்ட மாணவருக்கு 20 கி.மீ, மாணவியருக்கு 15 கி.மீ தூர சைக்கிள் போட்டியை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று காலை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முதல் 3.89 லட்சம் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும்பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட அளவிலும் வட்ட அளவிலும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறைகள் இருந்தால் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் 8300175888
என்ற எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது *ஷேர்*
பொங்கல் பண்டிகையொட்டி தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் இராமநாதபுரத்திலிருந்து ஜன10, 12 மற்றும் ஜன.17 தேதிகளில், வண்டி எண் : 06104/இராமநாதபுரம்-தாம்பரம் வாரம் இருமுறை சிறப்பு விரைவு வண்டி இயக்கப்பட இருக்கிறது. இந்த வண்டியில் முன்பதிவுவில்லா பெட்டிகள் இல்லை.வரும்5ம் தேதி முன்பதிவு தொடங்கும் முன்பதிவு செய்து கொள்ளவும். *ஷேர்*
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில் நீதி கோரி பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் இன்று நடைபெறும் பேரணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து பாஜகவினர் போலீசார் தடையை மீறி கோஷமிட்டவாறு புறப்பட முயன்றனர். இது தொடர்பாக மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் உள்பட 8 பேரை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுரையில் பேரணி செல்ல முயன்ற நடிகை குஷ்பு உள்ளிட்ட 500 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.