India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம், திருவாடனை அருகே உள்ள திருவெற்றியூரில் மகள்களுக்கு முன்னுரிமை அளித்து சொத்து எழுதி வைக்கும் பழக்கம் உள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள பாகம்பிரியாள் அம்மன் என்கின்றனர்.அப்பகுதி மக்கள். விஷ கடிக்கு ஆளானவனர்கள் இக்கோயிலில் உள்ள வாசுகி தீர்த்ததில் குளிப்பதன் மூலம் குணமடைவார்கள் என்பது இக்கோயிலின் நம்பிக்கை. இதனால் இந்த அம்மன் மருத்துவச்சி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். *ஷேர் பண்ணுங்க
தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய இரயில் இயக்க இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல்.6ம் தேதி முதல் புதிய ரயில் பயணத்தை துவக்க இருப்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தகவல் தெரிவித்துள்ளார். புதிய ரயில் தாம்பரத்திலிருந்து, சிதம்பரம் , திருவாரூர் வழியாக இராமேஸ்வரம் வந்தடைய நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. *ஷேர் பண்ணுங்க
இன்று (மார்ச்.27) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இராமநாதபுரம், திருஉத்திரகோசமங்கையில் வருகின்ற 4.4.2025 வெள்ளிக்கிழமை அன்று திருஉத்திரகோசமங்கையில் கும்பாபிஷேகம் நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு ஆண்டிற்கு ஒருநாள் மட்டும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் மரகதநடராசர், ஏப்.1 மாலை 5 மணி முதல் ஏப்.4 மாலை வரை சந்தனகாப்பு கலைக்கப்பட்டு மரகதமேனியாக காட்சியளிக்க உள்ளார். (இக்கோயிலுக்கு வருவோருக்கு நோய் தீரும் என்பது நம்பிக்கை) * மறக்காம ஷேர் செய்யுங்கள்*
ராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் உள்ளநீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. முதல் தொகுப்பு ஏப்.01 – ஏப்.13, இரண்டாம் தொகுப்பு ஏப்.15 – ஏப்.27, முன்றாம் தொகுப்பு ஏப்.29 – மே11, நான்காம் தொகுப்பு மே.13 – மே.25, ஐந்தாம் தொகுப்பு மே.27 – ஜூன்.8 வரை வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 99766 91417 தொடர்பு கொள்ளலாம்.
ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதி சீட்டு பெற்று விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 11 பேரை கைது செய்தனர். அதோடு ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றன.
திருச்சியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு பாம்பனில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் கடற்கரை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில் ஜீவா(30), ஜென்சி(24) ஆகியோரிடம் ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ ஐஸ் என்னும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து திருச்சிக்கு கொண்டு சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களில் விளையாட்டு துறையில் சாதித்து வருபவர்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு நிலை விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். சிறப்பு நிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விடுதியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து ஏப்.,6ம் தேதி 5 மணிக்குள் பதியவும்.
பத்தாம் வகுப்பு அரசு பொத்தேர்வுகள் நாளை மறுநாள் (மார்ச்.28) துவங்க உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 16,412 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 82 மையங்களில் அடிப்படை வசதிகளுடன் முன்னேற்பாடுகள் நடக்கின்றன. 860 பேர் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு காலை 10 முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கிறது. 24 மணி நேரம் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.26) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.