Ramanathapuram

News April 8, 2026

இராம்நாடு: இந்த நம்பரை 9445030725 SAVE பண்ணிக்கோங்க!

image

இராம்நாடு மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

News April 8, 2026

இராம்நாடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

இராம்நாடு மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

News April 8, 2026

கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம், கல்லூரி மாணவிகளுடன் வாக்காளர் விழிப்புணர்வு செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார். உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராம்நாடு: GH-ல் இவை எல்லாம் இலவசம் தெரிஞ்சுக்கோங்க

image

ராம்நாடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.

1. இலவச மருத்துவ பரிசோதனை

2. அவசர சிகிச்சை

3. மருந்துகள்

4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்

5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்

6. குழந்தை தடுப்பூசி

7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04322-221733 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)

News April 8, 2026

இராம்நாடு: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் அரசு வேலை.!

image

இராம்நாடு மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு <>CLICK<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News April 8, 2026

இராம்நாடு: மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் – MLA

image

ராமநாதபுரம் கிராம பகுதிகளில் நேற்று, காதர்பாட்சா முத்துராமலிங்கம் பிரச்சாரத்தின் போது பேசியதாவது, திராவிட மாடல் அரசின் மக்கள் நல திட்டங்கள் அனைவரையும் சென்றடைந்துள்ளது என்றும், மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பெண்கள் விரும்புகின்றனர். அப்போதுதான் தி.மு.க அரசின் திட் டங்கள் தொடர்ந்து கிடைக்கும் என கூறுகிறார்கள் என்று பேசினார்.

News April 8, 2026

இராம்நாடு: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை

image

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் சிறுமியை அசோக்குமார் (37) என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், அசோக் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.

இராம்நாடு: இன்று இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு..!

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி துணைமின் நிலையத்தில் அவசரப் பணி காரணமாக இன்று (ஏப்.8) காலை 11 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். குறிப்பாக மின்னோட்ட பகுதிகளான சிட்கோ, எமனேஸ்வரம், மஞசள்பட்டினம், வலையனேந்தல், வைகை நகர், புதுநகர், காந்தி நகர், பெரும்பச்சேரி, மணிநகர், சேதுபதி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!