India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எஸ்.பி.பட்டினம் அருகே முள் வேலி அடைக்கப்பட்டிருந்த இடத்தில் மணல் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து மருங்கூர் குரூப் வி.ஏ.ஓ ரேணுகா புகாரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்தனர். கனிம வள உதவி இயக்குநர் விஜயகுமார், திருவாடானை தாசில்தார், போலீசார் மணல் குவியலை பார்வையிட்டனர். இதில் 171 யூனிட் மணல் இருப்பது தெரிந்து ஏலம் விட ஆர்.டி.ஓ விற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து நேற்று (பிப்.15) முதுகுளத்தூர் சென்ற தனியார் பேருந்து மானாசாலை அடுத்துள்ள ஊசிலங்குளம் தனியார் பேப்பர் மில் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது. இந்த பேருந்தில் பயணம் செய்த மாயவேரி பூசாரியான ராமசாமி (72) என்பவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.
இன்று (பிப்.15) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
நாளை (பிப்.16) இராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம், சீனியப்பா தர்கா, அரியமான் கடற்கரை மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை குறித்த ஆய்வு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்திய இரயில்வே துறையின் தெற்கு இரயில்வே பொது மேலாளர் RN.சிங் GM-யை சந்தித்து நினைவு பரிசு வழங்கி இராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் இரயில் நிலையத்திற்கு இராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் பெயரை சூட்டவும், புதிய பாம்பன் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் Dr. APJ அப்துல் கலாம் பெயரை சூட்டவும் பாம்பனை சேர்ந்த சமூக ஆர்வலர் சிக்கந்தர் கோரிக்கை வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களில் ஸ்வைப்பிங், யூபிஐ டிரான்ஸ்பர் மூலமாக பணம் செலுத்தாமல் ரொக்க பணம் செலுத்தி மட்டுமே எரிபொருள் நிரப்பிக் கொள்ள புகார் வந்ததை தொடர்ந்து ராமநாதபுரம் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தனலட்சுமி இந்திய ஆயுள் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அறிக்கை அளித்துள்ளார்.
பாக்ஜல சந்தி கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடிப்பில் காரைக்கால் மற்றும் நாகை மயிலாடுதுறை மாவட்ட விசைப்படகுகள் ஈடுபடுகின்றன. இதனால் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் மார்ச்.1ஆம் தேதி தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நாட்டுப் படகு மீனவர் சங்க மாநில பொருளாளர் நம்புதாளை ஆறுமுகம் அறிவித்துள்ளார்.
முதுகுளத்தூர் அருகே உள்ள மேலகிடாரம் பகுதியைச் சேர்ந்த கணேசன். இவர் முதுகுளத்தூர் போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கமாக பணி செய்வதற்காக மேல கிடாரம் கிராமத்திலிருந்து முதுகுளத்தூரை நோக்கி வந்த போது கீழச்சாகுளம் அருகே எதிரே வந்த லாரி உரசியதில் கீழே விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக அம்மா பேரவை சார்பில் 2011 -2021 அதிமுக அரசின் சாதனை விளக்க திண்ணை பிரசாரம் பரமக்குடியில் நேற்று மாலை நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி தலைமை வகித்தார். அமைப்பு செயலர் அன்வர்ராஜா, அம்மா பேரவை இணைச்செயலர் சதன் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலர் சரவணக்குமார், மாவட்ட இணை செயலர் கவிதா சசிகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலர் சேது பாலசிங்கம் பேசினர்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக நடைபெறும் தீவிர சோதனையில் தேவிபட்டிணம் பகுதியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.
Sorry, no posts matched your criteria.