Ramanathapuram

News February 17, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News February 17, 2025

நில அளவர், வரைவாளர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு

image

டிப்ளமோ, ஐடிஐ படித்தோருக்கு ஒருங்கிணைந்த நில அளவர், வரைவாளர் பணிக்கு TNPSC சார்பில் ராமநாதபுரம் நகர் நெக்ஸான் என்டர்பிரைசஸ் சென்டரில் தொழில்நுட்ப தேர்வு இணையவழியில் இன்று (பிப்.17) நடந்தது. இத்தேர்வை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். இத்தேர்விற்கு விண்ணப்பித்த 437 பேரில் 156 பேர் மட்டும் இணைய வழி மூலம் தேர்வெழுதினர்.

News February 17, 2025

திரிபுரா மாநில ஆளுநருக்கு கலெக்டர் வரவேற்பு

image

திரிபுரா மாநில ஆளுநர் ஸ்ரீ இந்திரசேன ரெட்டி நல்லு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (பிப்.17) வருகை புரிந்துள்ளார். ஆளுநர் ஸ்ரீ இந்திரசேன ரெட்டி நல்லுவை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இவரது வருகையையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News February 17, 2025

இராமநாதபுரம் மாவட்ட நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவரம்

image

இன்று (17.02.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், திருவாடனை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். இதனை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

தொண்டி அருகே ஊரணியில் மிதந்த இளைஞர் சடலம்

image

திருவாடானை தாலுகா பனஞ்சாயல் ஊராட்சிபுதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் மகன் முருகானந்தம்(36) . இவர் நேற்று காலை புதுக்குடி கிராமத்தில் உள்ள ஊரணியில் இறந்த நிலையில் சடலமாக தண்ணீரில் மிதந்துள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறை ,காவல்துறையினர் அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News February 16, 2025

தொண்டி அருகே ஊரணியில் மிதந்த இளைஞர் சடலம்

image

திருவாடானை தாலுகா பனஞ்சாயல் ஊராட்சிபுதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் மகன் முருகானந்தம்(36) . இவர் இன்று காலை புதுக்குடி கிராமத்தில் உள்ள ஊரணியில் இறந்த நிலையில் சடலமாக தண்ணீரில் மிதந்துள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை காவல்துறையினர் அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News February 16, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப்.16) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News February 16, 2025

171 யூனிட் மணல் ஏலம் விட முடிவு

image

எஸ்.பி.பட்டினம் அருகே முள் வேலி அடைக்கப்பட்டிருந்த இடத்தில் மணல் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து மருங்கூர் குரூப் வி.ஏ.ஓ ரேணுகா புகாரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்தனர். கனிம வள உதவி இயக்குநர் விஜயகுமார், திருவாடானை தாசில்தார், போலீசார் மணல் குவியலை பார்வையிட்டனர். இதில் 171 யூனிட் மணல் இருப்பது தெரிந்து ஏலம் விட ஆர்.டி.ஓ விற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

News February 16, 2025

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து

image

மதுரையில் இருந்து நேற்று (பிப்.15) முதுகுளத்தூர் சென்ற தனியார் பேருந்து மானாசாலை அடுத்துள்ள ஊசிலங்குளம் தனியார் பேப்பர் மில் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது. இந்த பேருந்தில் பயணம் செய்த மாயவேரி பூசாரியான ராமசாமி (72) என்பவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.

error: Content is protected !!