India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர் டோமினிக் ரவி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளரை இராமேசுவரம் நகர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (பிப்.26) முதல் (மார்ச்.01) வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஒன்பது தென்மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் ராஜ்குமார்நேற்று (பிப்.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றமும் 4 பேருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சிவராமன் ஐபிஎஸ் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சேலம் வடக்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும்(பிப்.25), நாளையும் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் மாவட்டத்தில் உள்பகுதிகளில் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் ஒரு சில இடங்களில் லேசான மழையும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இராமேஸ்வரம், பாம்பன் தங்கச்சிமடம், தனுஷ்கோடி, தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
தமிழக அரசு நேற்று 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், 11 காவல் துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, தமிழக உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவின்படி,
ராமநாதபுரம் காவல் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.யூ.சிவராமன், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சேலம் வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையராக பணியாற்றுவார்.
இன்று (பிப். 24) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். ராமநாதபுரத்தில் மட்டும் 48 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச்.3ஆம் தேதிக்குள் இங்கு <
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 32 பேர் & 5 விசைபடகுகளை இலங்கை கடற்படையினா் பிப்.22 நள்ளிரவு கைது செய்தனா். இதை அடுத்து, ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், 32 பேர் உட்பட கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று முதல் வேலை நிறுத்தம் செய்வது என, தீர்மானம் நிறைவேற்றினர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.23) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
முதுகுளத்துார் புளியங்குடியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி பிப்.,18ல் மாயமானார். போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்த போது முதுகுளத்துார் ஆதனக்குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்திச் சென்றது தெரிய வந்தது. அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வி சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினார்.
Sorry, no posts matched your criteria.