India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிர்மல் குமார், மாலா ஆகியோர் தலைமையில் இன்று(செப்.,22) ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி குமரகுரு உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து நீதிபதிகள், கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், வருவாய்துறை அதிகாரிகள், போலீசார், மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் நூற்றாண்டு லயன்ஸ் சங்கம் சார்பில் முதல் மண்டல மாநாடு இன்று நடந்தது. மாவட்ட ஆளுநர் அய்யாத்துரை தலைமை வகித்தார். இதில் சிறப்பு எஸ்ஐ சுபாஷ் சீனிவாசன்(பசுமை காவலர்), திருமலை (பசிப் பணி நீக்கம்), லோக சுப்ரமணியன்(கலை பயிற்றுநர்), பாலசுப்ரமணியன்(சிறந்த ஊராட்சி நிர்வாகம்), சதீஷ் குமார்(ரத்த தானம்) ஆகியோருக்கு சிறந்த சேவையாற்றியமைக்காக விருது வழங்கப்பட்டது.
ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் புதிதாக கட்டப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில், பழைய ரயில் பாலத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இன்று(செப்.,22) கோரிக்கை மனு அளித்தார். மேலும் சென்னை – திண்டிவனம் – திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுத்தார்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான கேரம் போர்டு பிரிவில், திருவாடானை அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி மாணவர் அசத்தியுள்ளார். முதுகலை 2ஆம் ஆண்டு தமிழ் பிரிவு மாணவர் முனீஸ்வரர் ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த கேரம் போர்டு விளையாட்டில் 2ஆம் பரிசு பெற்றுள்ளார். இதை தொடர்ந்து திருவாடானை அரசு கல்லூரி & மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் இருந்த ஏசி, பிரிட்ஜ் மற்றும் பெட் உள்ளிட்ட பொருட்கள் நாசமாயின. ஆர்எஸ் மங்கலம் தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து எவ்வாறு நடந்திருக்கும் என்பது பற்றி ஆர் எஸ் மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் சில தினங்களாக ஏராளமான திருமணங்கள் நடந்தது. இதில் குழந்தை திருமணங்கள் நடக்கிறதா என சம்பந்தப்பட்டதுறையினர் விழிப்புணர்வுடன் இருந்து வந்தனர். இந்நிலையில் 1098 எண்ணிற்கு வந்த தகவலின்படி ராமநாதபரம் மாவட்டத்தில் 2 நாட்களில் 4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 14 வயதுடைய 2 சிறுமிகள், 17 வயது சிறுமிகள் 2 பேர் என மொத்தம் 4 சிறுமிகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவாஸ் கனி இன்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பரமக்குடிக்கு கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து பிரச்சார வாகனத்தில் சந்தக் கடை ஐந்து முனைரோடு பஜார் வழியாக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார். உடன் எம்எல்ஏக்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் இருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கு வரும் 27.9.24 அன்று பிற்பகல் 4.30 மணி அளவில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. முன்னாள் படைவீரர்கள் நேரில் வருகைதந்து பயன்பெறுமாறு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6200 நாட்டு படகுகள் மீன்பிடி
தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 3400 படகுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நாட்டு படகுகளை உடனடியாக பதிவு செய்து மீன்பிடி அனுமதி பெறாவிட்டால் மரைன் போலீசார் மூலம் படகுகள் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 ஆண்டுகள் கடந்து பிறப்பு பதிவுகளுக்கு குழந்தையின் பெயரினை பதிவு செய்து பிறப்பு சான்று பெற 5 ஆண்டு நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்த கால அவகாசம் 31.12.2024 உடன் முடிகிறது. எனவே, குழந்தையின் பெயர் இன்றி பிறப்பு சான்று பெறப்பட்டிருந்தால் பெயரை பதிவு செய்து பிறப்பு சான்று பெறவேண்டும். இதற்கான கால அவகாசம் இனி நீட்டிக்கப்படாது என ஆட்சியர் சிம்ரன்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.