Ramanathapuram

News April 17, 2025

விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு

image

ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெறக்கூடிய கோடைகால பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து,ஹாக்கி கையுந்து பந்து, டென்னிஸ், இறகுப் பந்து ஆகிய விளையாட்டுகளில் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்படும்.முகாமில் கலந்து கொள்பவர்கள் மைதானத்திற்கு நேரில் வரலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.

News April 17, 2025

இராமேஸ்வரம் கோவிலில் தரிசன கட்டணம் ரத்து

image

இராமேஸ்வரம், திருச்செந்தூர், திருவரங்கம் உள்ளிட்ட பத்து திருக்கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு தரிசன‌ கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும், அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.51.50 கோடி மதிப்பீட்டில் சமயபுரம், இராமேஸ்வரம், திருவரங்கம், வேளச்சேரி உள்ளிட்ட 4 கோவில்களில் அர்ச்சகர் (ம) பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டி தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

News April 17, 2025

ஊர் காவல்படை பிரிவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு சான்றிதழ்

image

இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை, இராமநாதபுரம் மாவட்ட ஊர் காவல்படை பிரிவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்த 30 ஊர் காவல்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ,IPS., இன்று (17-04-25) காலை சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஊர் காவல்படை காவலர்கள் மகிழ்ச்சியுடன் சான்றிதழை பெற்றனர்.

News April 17, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய உதவி எண்கள்

image

இராமநாதபுரம் மாவட்ட மக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077, ஆட்சியர் அலுவலகம் – 04567-230056,57,58, தீ தடுப்பு, பாதுகாப்பு-101, விபத்து அவசர வாகன உதவி – 102
மருத்துவ உதவி – 104, குழந்தைகள் பாதுகாப்பு – 1098
பேரிடர் கால உதவி – 1077, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993 ஆகிய உதவி எண்களில் அழைக்கலாம்.*ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

இராமநாதபுரத்தில் ரூ.5.5 கோடியில் புதிய திட்டம்

image

பொதுப்பணித்துறை(நீர்வளம்) அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், பார்த்திபனுார் நீர்த்தேக்கம் துவங்கி ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை வரை 78 கி.மீ., உள்ள ஆற்றின் இரு கரைகள், கால்வாய்க்குள் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்ட மதிப்பீடு தயார் செய்து (ரூ.5.5கோடி) பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அரசாணை வெளியான பிறகு இதற்கான வேலைகள் தொடங்கப்படும் என்றார். *ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

போதையில் இருவரை அரிவாளால் வெட்டியவர்கள் கைது

image

ரெகுநாதபுரம், மேலுார் செல்லும் சாலையில் (ஏப்.15) இரவு முனீஸ்வரன், ராஜகுரு என்ற இருவர் சாலையில் நடந்து சென்ற போது மது போதையில் வந்த இருவர் முனீஸ்வரனிடம் அலைபேசியை கேட்டு தகராறு செய்தனர். அவர்கள் தர மறுத்ததால் இருவரையும் அரிவாளால் வெட்டினார். இது தொடர்பாக கார்மேகம்(27), சூர்யா(26), ஆகியோரை திருப்புல்லாணி போலீசார் கைது செய்தனர்.(இத்தகைய சூழலில் இரவு ரோந்து பணி காவலர்களை அழைக்கலாம்) *ஷேர் பண்ணுங்க

News April 16, 2025

ஏர்வாடி தர்காவிற்கு புதிய நிர்வாகிகள்

image

ஏர்வாடியில் ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கு ஒரு முறை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளால் தர்கா நிர்வாகம் நிர்வகிக்கப்படுகிறது.தர்கா நிர்வாகம் அடுத்த மாதம் நிறைவுக்கு வரும் நிலையில் உள்ளது.ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவராக அகமது இப்ராகிம்,செயலாளராக சித்திக்,உதவி தலைவராக முகம்மது சுல்தான் ஆகியோரும் மற்றும் 18செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

News April 16, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு வேலை

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.

News April 16, 2025

இராம்நாடு பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் வெப்ப அலை குறித்த உள்ளூர் வானிலை செய்திகளை, செய்திதாள், வானொலி தொலைக்காட்சிகள், TN ALERT செயலி மூலம் தெரிந்து கொண்டு அன்றைய பணிகளை திட்டமிடுமாறும், வீட்டிலிருந்து வெளியே செல்வது மிக அவசியமாக இருப்பின் நண்பகல் 12 மணிமுதல் மாலை 3 மணிவரை வெளியே செல்வதை தவிர்க்கும் மாறும் காலை மாலை செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!