Ramanathapuram

News March 7, 2025

+2 ஆங்கில தேர்வில் 238 பேர் ஆப்சென்

image

பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 64 தேர்வு மையங்களில் 160 பள்ளிகளைச் சேர்ந்த 14,203 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 152 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வில் மாணவர்கள் 222 பேரும், தனித்தேர்வாளர்கள் 16 பேர் என 238 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

News March 7, 2025

இராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் 7வது புத்தகத் திருவிழா இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மார்ச்.21 முதல் 30 வரை நடக்கிறது. இங்கு 80க்கும் மேற்பட்ட அரங்குகளில் முன்னணி புத்தக பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள பல ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. இதே போல ஓவியங்கள், மூலிகைக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. *மறக்காம புத்தக வாசிப்பாளர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 7, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தின் வெப்பநிலை அறிக்கை

image

வலுவான உயர் அழுத்தம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு பகலில் வானம் மேகங்கள் சற்று தெளிவாகவும் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் காணப்படும். இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக உள்பகுதிகளில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பநிலை அதிகரித்தே காணப்படும்.

News March 7, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மார்ச்.11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. வரும் 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 7, 2025

வக்கீல் கொலை வழக்கில் மூன்று இளைஞர்கள் கைது

image

பரமக்குடியில் நேற்று முன் தினம் இரவு வழக்கறிஞர் உத்தர குமார் வெட்டி கொலை செய்யப்பட்டர். இந்த வழக்கில் இருசக்கர வாகனத்தில் வந்து வாளால் வெட்டி கொலை செய்த பரமக்குடி வைகை நகர் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன், அப்துல் கலாம், கிரண் ஆகிய 3 இளைஞர்களை இன்று பரமக்குடி நகர் காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 7, 2025

வழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழா தேதி அறிவிப்பு

image

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் கோவில் 85வது பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 2-ம் தேதி காப்புகட்டு திருவிழா தொடங்குவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரம்மபுரீஸ்வரர் கோவில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து வந்து மதியம் 12:00 மணி அளவில் கடக லக்னத்தில் வழிவிடு முருகனுக்கு அபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்

News March 7, 2025

ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விநோத திருவிழா

image

கமுதி, முதல்நாடு கண்மாய் கரையில் உள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம். வருடத்திற்கு ஒரு முறை (புரட்டாசி) திருவிழா நடைபெறும். இத்திருவிழா ஆண்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. இதில் பெண்களுக்கு அனுமதியில்லை. இங்கு மண்ணால் பீடம் அமைத்து, எல்லைப்பிடாரி அம்மன் உருவம் செய்து 50 கிடாய்களை பலியிட்டு, அதன் தலைகளை பீடத்திற்கு முன் வைத்து, பூஜை செய்வர். மீதமுள்ள உணவு குழிதோண்டி புதைக்கப்படும். *தகவலை ஷேர் பண்ணுங்க

News March 7, 2025

குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி

image

ராமேஸ்வரம், சம்பையைச் சேர்ந்த பிரபு,விமலா தம்பதியினருக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு கடன் தொல்லை இருந்த நிலையில், பிரபு வெளியூரில் தங்கி வேலை பார்த்துள்ளார். கடன் தொல்லையால் அவதிப்பட்ட விமலா, வீட்டில் மகளை துாக்கிலிட்டு கொலை செய்தார். பின், தானும் துாக்கில் தொங்கினார். விமலாவை உறவினர்கள் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமேஸ்வரம் டவுன் போலீசார் விசாரணை.

News March 6, 2025

உத்தரகோசமங்கை சிவன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா ?

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரகோசமங்கை ஊரில் அமைந்துள்ளது மங்களேசுவரர் சிவன் கோவில். இங்கு உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் 3000 வருடங்களுக்கு முந்தையது. உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் இந்த கோவில் எனக் கூறப்படுகிறது. சந்தனக் காப்பில் காட்சி தரும் நடராசரை வழிபட்டால் முன்னோர் சாபம், திருமணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைகள் தீரும் என்பது நம்பிக்கை. உடனே ஷேர் செய்யுங்கள்.

News March 6, 2025

இருமேனி அருகே வீடு தீப்பிடித்து சேதம்

image

உச்சிப்புளி இருமேனியில் இன்று (மார்ச்.6) அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த குளிர்சாதன பெட்டி, வாசிங் மிஷின், மின் மோட்டார்கள், ஏசி உள்ளிட்டவை பழுதாகின. அப்போது தாஹிரா என்பவரது வீட்டில் உயர் மின்னழுத்தத்தால் ‌மின் பொருட்களோடு வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!