India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கமுதி கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் பத்மாஸ்வரம் (25 ). கடந்த 2022ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, பத்மாஸ்வரத்திற்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக.,வின் அவதூறு பிரசாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(03.10.2024) முதல் அக்.,9 வரை பிரசார நடைபயணம், தெரு முனை பிரசாரம் மாநில துணைத்தலைவர் இதயத்துல்லா, ராம.கருமாணிக்கம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற உள்ளது. இத்தகவலை மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை அக்.,4ல் இலங்கை செல்லவுள்ளார். அவர் கச்சத்தீவு ஒப்பந்தப்படி பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்ய வேண்டும். இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களையும், விசை, நாட்டுப்படகுகளையும், இலங்கையில் விடுவிக்கப்பட்ட இந்திய படகுகளையும் மீட்க வேண்டும் என தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் சின்னத்தம்பி அமைச்சருக்கு இ-மெயில் மூலம் மனு அனுப்பி உள்ளார்.
தமிழ்நாடு அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு கபடி அணி வீரர்களை தேர்வு செய்யும் போட்டி தேனியில் நடந்தது. இதில் ஆர்.எஸ்.மங்கலம் மோர்ப்பண்ணை சேர்ந்த மீனவர் காளிதாஸ் மகன் வீர செல்வதாஸ்(19) தமிழக கபடி அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். இவர் இரு ஆண்டுக்கு முன்பு 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழக அணியில் இடம்பெற்று, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT.
பரமக்குடி அரசு உதவிபெறும் தனியார் பள்ளியின் விலங்கியல் ஆசிரியர் வெங்கடேசன்(55). இவர் பிளஸ்2 வகுப்பில் மாணவியர் மத்தியில் இனப்பெருக்கம் தொடர்பான படங்களை காட்டி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர் அளித்த புகாரின்படி வெங்கடேசன் மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து ஆசிரியர் வெங்கடேசனை தாளாளர் லெனின்குமார் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்.10 – செப்.25 வரை நடந்தன. 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட 55 வகை போட்டிகளில் 2,112 பேர் முதல் 3 இடம் பிடித்தனர். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடித்த 704 வீரர்கள் சென்னையில் அக்.4 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்குகிறது. வரும் 15-ந் தேதிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இதன் மூலம் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வுகூட்டம் கீழக்கரை நகராட்சியில் நடைப்பெற்றது.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அதிமுக மருத்துவரணி துணை செயலாளராக உள்ளார். இவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட பொறுப்பாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளார். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் புதிய அதிமுக உறுப்பினர் சீட்டுகள் வழங்கும் பணிகளை மேற்பார்வையிட்டு தலைமைக்கு அறிக்கை அளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இன்று (அக்.2) காலை 10 மணி இரட்டையூரணியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். காலை 10.30 இரட்டையூரணியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கிறார். மதியம் 12 மணி பாரதி நகரில் காமராஜரின் 50ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் நாளை (அக்.2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காலை 9.45 மணிக்கு ஓம்சக்தி நகரில் உள்ள காதி கிராப்டில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து காலை 10.10 மணிக்கு ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.