Ramanathapuram

News October 11, 2024

கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் குறித்து மக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள TN-ALERT என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலிவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் மக்கள் தொடர்பு கொண்டு பருவ மழை தொடர்பான புகார்களை அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 11, 2024

பாம்பன் ரயில் புதிய பாலத்தில் அக்.14ல் ஆய்வு

image

பாம்பன் ரயில் புதிய பாலத்தின் முற்றிலும் நிறைவடைந்துள்ளன. இதை தொடர்ந்து இப்பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்குவது தொடர்பாக மையப்பாலத்தின் உறுதித் தன்மை குறித்து, தெற்கு ரயில்வே வாரிய பல்வேறு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பாலத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் அக்.14ல் ஆய்வு செய்ய உள்ளதாக செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

News October 11, 2024

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை சுதீர்லால் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News October 10, 2024

உணவின் தரம் பற்றி புகார் அளிக்கலாம் :ஆட்சியர் தகவல்

image

“உணவுப் பொருள்கள் தரம் இல்லாமல் இருப்பது, கலப்படம், காலாவதி ஆகிய உணவுப் பொருள் ஏதேனும் புகார் இருந்தால் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள, 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் அளிக்கலாம்” என ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

தொண்டியில் காங். கவுன்சிலர் மீது தாக்குதல்

image

தொண்டி பேருராட்சி 7வது வார்டு (காங்)கவுன்சிலரான காத்தார் ராஜா இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது கிழக்கு கடற்கரை சாலையில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கம்பால் தாக்கியதில் காத்தார் ராஜா தலையில் காயம் ஏற்பட்டு தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அனுப்பி வைக்கப்பாட்டார். இதுகுறித்து தொண்டி போலிசார் விசாரிக்கின்றனர்.

News October 10, 2024

இராமநாதபுரம் இளைஞர்களே! ரேஷன் கடையில் வேலை

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதிவுள்ள விண்ணப்பதாரர்கள் WWW.drbramnad.net என்ற இணையதளம் மூலம் வரும் நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News October 9, 2024

இம்மானுவேல் சேகரனாரின் 100 வது பிறந்தநாள் விழா

image

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிக்கலில் இம்மானுவேல் சேகரனாரின் 100 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கடலாடி வட்டம் தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற நலச்சங்கம் நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினர், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News October 9, 2024

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை

image

பரமக்குடியில் இன்று (அக்,09) சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் தமிழக அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், எம்பி நவாஸ்கனி, மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News October 9, 2024

நூலகத்தை மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

image

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா ஆனந்தூரில் 30 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் நூலகம் பழுதடைந்து இடியும் தருவாயில் உள்ளது. ஊர் பொதுமக்கள் வழக்கறிஞர் ஆசிக் உதவியுடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். நூலகத்தின் புகைப்படங்களை பார்த்த நீதிபதிகள் நூலகத்தினை உடனடியாக மூடி புதிய நூலகம் கட்ட அல்லது புதுப்பிக்க மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.

News October 9, 2024

ராம்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(அக்.09) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணிக்குள் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.