India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1959 ஆம் ஆண்டு (அக்,21) லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்று இருந்த இடத்தில் சீனா ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (அக்,21) இராமநாதபுரத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவரை நியமனம் செய்ய நீதிமன்றம் மூலம் பொதுநல வழக்கு தொடர்ந்தார் தொண்டியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது அதன்படி தமிழக அரசு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பரணிதரனை நியமித்து உத்தவிட்டதால் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் வண்டி எண்: 06103 வாரத்தில் 3 நாட்கள் (திங்கள், வியாழன் & சனி) ஆகிய தினங்களில் மட்டும் தாம்பரத்திலிருந்து மாலை 5:00PM புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு மறுநாள் காலை 4:55AM மணிக்கு வந்தடையும். இந்த ரயில் கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக செல்லாது, அதற்கு மாற்றாக மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(அக்.21) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளில் தனிநபர் நூலகம் அமைத்து பராமரிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு விருந்துக்கு விண்ணப்பிக்களம் என இராமநாதபுரம் மாவட்ட நூலக அலுவலர் பாலசரஸ்வதி தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனிநபர் நூலகம் வைத்திருப்போர் dloramnad@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட நூலக அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ராமநாதபுரம் அருகே களத்தாவூர் பகுதியை சேர்ந்தவர் பாலு மகன் இளையராஜா(36). ராமநாதபுரம் மின்வாரிய வடக்கு பிரிவில் கேங்மேன் பணியாற்றி வரும் இவர் சூரங்கோட்டை சேர்ந்த 22 வயது மனநிலை பாதிக்கப்பட்ட வாய் பேச முடியாத பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். அக்கம் பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்து அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இளையராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை டி.எஸ்.பி இளஞ்செழியன் தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
பரமக்குடி அருகே மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கோவையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த காரும், ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதின. இதில், பரமக்குடியைச் சேர்ந்த நாகராஜன், சந்தோஷ் ஆகிய இளைஞர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் நாளை காலை 8.30 வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 18 முதல் 60 வயதுக்கு மிகாதோரை வாரிய உறுப்பினராக சேர்த்தல், புதுப்பித்தல் & நலத்திட்ட உதவி கோரும் மனு பெறும் முகாம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்நாள் அக்.24 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அரங்கில் நடைபெற உள்ளது. உரிய தகுதியுடைய சீர்மரபினர் இனத்தை சார்ந்தோர் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.