India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச, தேசிய, விளையாட்டு, ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற மற்றும் பங்கேற்ற தமிழக முன்னாள் வீரர்கள் மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் பெற விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in-ல், ஆக.,31ல் 58 வயது நிரம்பிய வீரர்கள் செப்.,1 முதல் செப்.,30 மாலை 6 மணி வரை விண்ணப்பித்து பயன் பெறலாம் என ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட 235 போட்டியாளர்களில் கமுதி முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியில் வணிகவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி காளிகாதேவி வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வானார். இவருக்கு ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம், வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம் பரமக்குடி ஆர்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை(31.8.2024) காலை 9 மணி – மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்களது சொந்த டிராக்டர், உபகரணங்களை எடுத்து வந்து இலவசமாக பராமரிப்பு செய்துகொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். SHARE IT.
பரமக்குடியில் 9 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி 3வது வார்டு கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ராஜாமுகமது, தரகர்கள் உமா, கயல்விழி ஆகியோரை கைதுசெய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் நேற்று(ஆக.,29) கோர்ட்டில் 5 பேரும் ஆஜரான நிலையில், விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு நீதிபதி கோபிநாத் ஒத்திவைத்தார்.
கமுதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று (ஆக.29) 48 ஆம் நாள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் விக்கினேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், நவாவரண பூஜை, ஸப்தசதீஜப பாராயணம், யோகினி பைரவர் பலி பூஜை மற்றும் தீபாராதனைகள் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரிடம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் இறால் ஏற்றுமதி அபிவிருத்திக்காக ரூ.39 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்காக ஜெயச்சந்திரன் அளித்த காசோலை பணமில்லை என்று திரும்பி வந்துவிட்டது. இது தொடர்பாக செல்வகுமார் கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி பிரபாகரன், ஜெயச்சந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், வேளாண் வணிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிட்டங்கியை இன்று(29.08.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திமுக, காங்., உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு தனி நபர்கள் எந்த ஒரு உரிமையும் பெறாமல் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க, இந்து முன்னணி கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் அவர்களிடம் நேற்று(ஆக.,28) நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.
ராமாநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாகச் சென்ற மீனவர் ஒருவர், அவர் கொண்டு வந்த சாக்கு பையை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். சாக்கு பையை சோதனையிட்ட போலீசார், அதிலிருந்த தடை செய்யப்பட்ட வெடி மருந்துகளான 405 எண்ணம் ஜெலட்டின் குச்சிகள் & சம்பவ இடத்தில் கிடந்த செல்போனையும் கைப்பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 26ம் தேதி மீன்பிடிக்கச் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பியபோது நடுக்கடலில் படகு மூழ்கி விபத்தானது. இதில் மாயமான மீனவர்கள் எமரிட், வெள்ளைச்சாமி ஆகிய 2 பேரை இராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் உதவியுடன் நடுக்கடலில் தேடி வந்த நிலையில் தற்போது மீனவர் எமரிட் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.