India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் மகன் கனி(27). கார் ஓட்டுநரான இவர் நேற்று(அக்.23) 3 பேரை ராமேசுவரத்துக்கு காரில் அழைத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, சத்திரக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எதிரே வந்த லாரியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் கனி உயிரிழந்த நிலையில், மற்ற 3 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
இன்று(அக்.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் & அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. சிவராமன் IPS அவர்கள் தலைமையில் இன்று ரோந்து பணி நடைபெறும். வேறு எதாவது தகவல் தேவைப்பட்டால் எண் 100 ஐ டயல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நாளை(அக்.24) ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.23) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமுதி அடுத்த பசும்பொன்னில் அக்டோபர் 30 அன்றுமுத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று(அக்.,22) ராம்நாடு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் & எஸ்பி சந்தீஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மறைத்து என் மீதும் என் குடும்பத்தினர்கள் மீதும் தவறான தகவல்களை பத்திரிக்கைகள் மூலம் அவதூறு பரப்பி வருகிறவர்களை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று பால்வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்,எஸ், ராஜகண்ணப்பன் பதிவு செய்துள்ளார்
இராமநாதபுரத்தில் வருகிற (அக்.24) பாரதி நகர் பீமாஸ் மஹாலில் மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இராமநாதபுரம் மாவட்ட நான்கு சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். எனவே மாநில மாவட்ட அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் பேராவூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆண்டி மகன் பசுபதி (30). இவர் தனது நண்பர் கவியரசன் என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். கேணிக்கரை அருகே சென்ற போது முன்னால் சென்ற தனியார் பஸ்சின் பக்கவாட்டில் இடித்து விபத்துக்குள்ளானதில் பசுபதி பலியானார். கவியரசன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, ராம்நாடு தாம்பரம் வாரம் மும்முறை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வண்டி எண் 06103 (நவ,02) முதல் (நவ,30) வரை வியாழன், சனி, திங்கள் வாரம் மும்முறை ரயில் சேவையும், வண்டி எண் 06104 (நவ,30) (டிச,01) வரை ராம்நாடு தாம்பரம் வரை வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய தினங்களில் இருந்து புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பனில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாம்பன் இரயில் பாலத்திற்கு Dr. APJ Abdul Kalam Railway Bridge Pamban என்று பெயர் வைக்க இந்திய குடியரசுத் தலைவர் -க்கு பாம்பனை சேர்ந்த சமூக ஆர்வலர் சிக்கந்தர் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்திய இரயில்வே துறைக்கு இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு பரிந்துரை செய்துள்ளார். எதிர்பார்ப்பில் தீவு மக்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
Sorry, no posts matched your criteria.