India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்ட 26 ஆம் ஆண்டு வலுதூக்கும் போட்டியானது பரமக்குடியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் அதிக எடை தூக்கி K.V.ரிஷிகேஷ் ராமநாதபுர “இரும்பு மனிதர்” பட்டத்தை பெற்றார். மேலும் பெண்கள் பிரிவில்V. N. தேஜா அதிக எடை தூக்கி ராமநாதபுர “இரும்புப் பெண்மணி” என்ற பட்டத்தை பெற்றார்.
கீழக்கரை, ஏர்வாடி கே.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் சுனைத்(22). இவர் நேற்று(செப்.,1) மாலை தனது நண்பருடன் பைக்கில் ஏர்வாடி ஊராட்சி அலுவலகம் அருகே சென்றபோது அவ்வழியே சென்ற லாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முஹமது சுனைத் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது குறித்து லாரி டிரைவர் வெள்ளைத்துரையிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வரும் கனகசபாபதி என்பவர் காவல்துறையில் பணிபுரிந்து கொண்டே தனது கடின உழைப்பால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-II தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் IPS வெகுவாக பாராட்டினார்.
முதுகுளத்தூர் செல்வநாயகபுரத்தில் அகில இந்திய விவசாய தொழிற்சங்கம் சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 நாள் வேலையில் உள்ள ஊதியத்தை முழுமையாக வழங்க கோரியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல், பயிருக்கு இன்சுரன்ஸ் வழங்க கோரியும், விவசாய தொழிற்சங்கம் அமைக்க கோரி செல்வநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பால்சாமி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
நாளை (செப்.01.) கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கிமீ வரையிலும் அதிகபட்சமாக 65 கிமீ வரையிலும் வீச கூடும். இதனால் கடல் அலை 2. 3 முதல் 2.5 மீட்டர் உயரம் எழக் கூடும். இதனால் மண்டபம் தென் கடல் பகுதியில் விசைப்படகு, நாட்டுப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது என மண்டபம்
மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அடுத்த மாதம் அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன் தேவர் குருபூஜை ஆகியவை நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு செப்.9 முதல் 2 மாதங்களுக்கு 163(1) தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு “தேர்வை கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் கல்வி விழிப்புணர்வு பயிலரங்கம் இன்று(ஆக.,31) நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமில் திரைப்பட நடிகர் தாமு சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு அச்சமின்றி தேர்வு எழுதுவதற்கான விழிப்புணர்வு வழங்கினார்.
அண்ணா, பெரியார், காந்தி பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செப்.18,19,20ல் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. மேலும் தகவலுக்கு தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என கலெட்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
மதுரை வெங்கடேசன் என்பவர் திருட்டு வழக்கு தொடர்பாக 2012ல் எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி வழக்குப் பதிவு செய்தனர். இதில் போலீசார் கிருஷ்ணவேல், ஞானசேகரன், கோதண்டராமன் ஆகிய 3 பேரும் நேற்று மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகினர். வழக்கில் 7 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின் நீதிபதி குமரகுரு வழக்கை செப்.,12க்கு ஒத்திவைத்தார்.
சர்வதேச, தேசிய, விளையாட்டு, ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற மற்றும் பங்கேற்ற தமிழக முன்னாள் வீரர்கள் மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் பெற விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in-ல், ஆக.,31ல் 58 வயது நிரம்பிய வீரர்கள் செப்.,1 முதல் செப்.,30 மாலை 6 மணி வரை விண்ணப்பித்து பயன் பெறலாம் என ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.