Ramanathapuram

News October 28, 2024

பசும்பொன்னில் இன்று தொடங்குகிறது குருபூஜை விழா

image

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழா இன்று‌(அக்,28) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இன்று காலை 6 மணிக்கு மங்கள இசை, 7:35 மணிக்கு கணபதி ஹோமம், லட்சார்ச்சனை பெருவிழா நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் இரவு 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகின்றன.

News October 28, 2024

மாணவர்களை தாக்கிய தலைமை ஆசிரியை மீது வழக்கு

image

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஷ்வரம் தங்கச்சிமடம் ஊராட்சிக்குள்பட்ட மெய்யம்புலி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் கழிப்பறையில் மாணவர்கள் தவறான வாசகங்களை எழுதினர். இதையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியை ஷாலினி சில மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெற்றோர்கள் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 27, 2024

குருபூஜைக்கு சென்று திரும்பும் போது விபத்தில் இளைஞர் பலி

image

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் விக்னேஷ்(24). இவர் இன்று(அக்.27) காலை ராமேஸ்வரத்திலிருந்து காளையார் கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு காரில் சென்றார். இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை மடக்கொட்டான் அருகே சென்ற போது காரில் இருந்து தவறி கீழே விழுந்தவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

News October 27, 2024

மீனவர்களின் 10வது நாள் வேலை நிறுத்த போராட்டம்

image

மண்டபம் பகுதியைச் சேர்ந்த 27 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் அக்.14ம் தேதி கைது செய்து வவுனியா & யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் நவ.9ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்தது, 27 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் 700-க்கும் மேற்பட்ட மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் 10வது நாளை எட்டியது.

News October 27, 2024

மருதுபாண்டியர் குருபூஜை விழா மரியாதை செலுத்திய MLA

image

மருதுபாண்டியர்களின் 223-வது குருபூஜை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள மருதிருவர் சிலைக்கு மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து மருதிருவர் சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் MLA காதர் பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News October 27, 2024

இராமநாதபுரத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

image

மதுரை ,தேனி மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்ததால் வைகை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்றின் கரையோர பகுதியில் குடியிருந்து அமர்ந்திருக்கும் மக்களுக்கு பரமக்குடி, இராமநாதபுரம் தாசில்தார் பேரிடர் மேலாண்மை துறைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது மக்களை அப்புற படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 26, 2024

தமிழக முதல்வருக்கு நடிகர் கருணாஸ் கோரிக்கை

image

தமிழகம் முழுவதும் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவுக்கு வரும் வாகனங்களுக்கு அக்.28 ஆம் தேதிக்கு முன்பே அனுமதி சீட்டுகள் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவன தலைவர் முன்னாள்  MLA கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

News October 26, 2024

ரயில் ப்ரேக் ஷூ பட்டு விவசாயி உயிரிழப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே எட்டிவயல் ரயில்வே தண்டவாளத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகவேலு(61) என்பவர் இன்று(அக்.26) காலை விவசாய பணிக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலின் ப்ரேக் ஷீ கழன்று அவரின் முகத்தில் பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

News October 26, 2024

பாஜக சார்பில் தேவர் குருபூஜையில் பங்கேற்பவர்களின் பட்டியல்

image

பசும்பொன்னில் வருகிற (அக்.30) முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை விழாவில் பாஜக சார்பில் கலந்து கொள்பவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய இணை அமைச்சர் முருகன், H ராஜா, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், பொன்பால கணபதி, ராம ஸ்ரீ நிவாசன், ஆனந்தன் அய்யாசாமி, முரளிதரன், தரணி முருகேசன், EMT கதிரவன், ஜி நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

News October 26, 2024

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(அக்.26) தென்காசி, திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.