India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
ராமநாதபுரத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும். முன் அனுபவம் தேவையில்லை. ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளர்களின் 2025ஆம் ஆண்டுக்கான சேர்க்கை ஆரம்பித்துள்ளது. இதற்காக துண்டு பிரசுரங்களை செங்கப்படை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் நேரடியாக கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
2025-26ம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன் ஜித் கூறியுள்ளார்.
முதுகுளத்தூரில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிக்கு சேர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 18-40 வயது வரம்பு, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. மாதந்திர கல்வி உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.https://www.skilltraining.tn.gov.in என்ற லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே இரட்டைஊரணி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 36 பண்டல்களில் 1000 கிலோ பீடி இலைகளை டிராக்டரில் கொண்டு வந்தனர். உச்சிப்புளி காவல்துறையினர் கடத்தல்காரர்களை மடக்க முயன்றபோது, டிராக்டர் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் வருண்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025-26ம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன் ஜித் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி -3, கடலாடி-6, கீழக்கரை-2, முதுகளத்தூர்- 4, திருவாடானை-1, பரமக்குடி- 3, ராமேஸ்வரம் -1 , ராஜசிங்கமங்களம்- 9 ஆகிய தாலுகாவில் உள்ள 29 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்கள், விண்ணப்பங்களை இங்கே<
பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நேற்று முன்தினம் காலை கைது செய்யப்பட்ட ஒரு படகையும் அதிலிருந்து பத்து மீனவர்களையும் இலங்கை நீர்கொழும்பு அருகே உள்ள வெளிச்சரா நீதிமன்றத்தில் இலங்கை கடற்படையினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது, வழக்கு விசாரித்த நீதிபதி மீனவர்கள் 10 பேரையும் வரும் ஆக. 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இன்று (ஆகஸ்ட் 7) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.