Ramanathapuram

News November 3, 2024

ராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

இன்று (03.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. DSP பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று ரோந்து பணி நடைபெறும். வேறு எதாவது தகவல் தேவைப்பட்டால் எண் 100 ஐ டயல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2024

திருவாடனை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

திருவாடானை தாலுகா நம்புதாளையில் மணவெளி உறவு காரணமாக பரமக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நேற்று முக்கிய குற்றவாளியான சரவணன் என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் குற்றவாளிகள் தப்ப உதவிய கார் டிரைவர் திருவாடானை சமத்துவபுரத்தை சேர்ந்த கெல்வின் ராஜ் (19) என்பவரை தொண்டி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

News November 3, 2024

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ. 03) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2024

ராமநாதபுரத்தில் சிறுமி உட்பட இருவருக்கு டெங்கு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த மழை நீரில் டெங்கு கொசுக்கள் பெருகி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. திருப்பாலைக்குடியைச் சேர்ந்த 2 வயது சிறுமிக்கும், திருவாடானை வெள்ளையபுரம் பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண்ணிற்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News November 3, 2024

ராமநாதபுரத்தில் கனமழை வானிலை மையம் தகவல்

image

தமிழகத்தில் இன்று மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர்,தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் தென் தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் இடி,மின்னலுடன் மழை பெய்யலாம்.

News November 2, 2024

வரலாற்றை தாங்கி நிற்கும் பொந்தன்புளி மரம்

image

இராமேஸ்வரம் அருகில் உள்ள ஊர் பொந்தன்புளி அந்த பகுதியில் பொந்தன் புளி மரம் ஒன்று உள்ளது,. அதன் காரணமாகவே அந்த பகுதிக்கு பொந்தன்புளி என்ற பெயர் வந்தது. இந்த மரம் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. மரத்தின் காய் மற்றும் இலைகள் குதிரைகளுக்கு உணவாக வழங்கப்பட்டதாம். பொந்தன்புளி மரம் 10,000 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் ஆற்றல் உடையதாம்.

News November 2, 2024

ராட்டினம் தொழிலாளி கொலை: முக்கிய குற்றவாளி கூலிபடையா?

image

திருவாடானை தாலுகா நம்புதாளையில் நேற்று(நவ.1)  (பரமக்குடி) முத்துக்குமார் என்ற ராட்டினம் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொண்டி போலிசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இன்று(நவ.2) காலை அமரன் வயல் பகுதியில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான சிவகங்கை சரவணன் என்பவரை கைது செய்தனர். மேலும் கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளனரா என்றும் விசாரித்து வருகின்றனர்.

News November 2, 2024

திருமணம் மீறிய உறவின் விளைவு: பட்டப்பகலில் கொலை!

image

தொண்டி அருகே நம்புதாளையில் தீபாவளிக்கு ராட்டினம் தொழில் செய்ய வந்த பரமக்குடியை சேர்ந்த முத்துகுமாரை நேற்று(நவ.1) சிலர் வெட்டி படுகொலை செய்தனர். தொண்டி போலீஸ் விசாரனையில் சிவகங்கை பெருமாட்சேரி சரவணன் அக்காவுடன் முத்துக்குமார் திருமணம் மீறிய உறவு வைத்துள்ளார். அவரை கண்டித்தும் பலன் இல்லை என்பதால் சரவணன் & சிலர் சேர்ந்து கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து போலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

News November 2, 2024

ராமேஸ்வரத்தில் பட்டாசு வெடித்த மாணவர் முகம் சிதைந்து பலி

image

ராமேஸ்வரம் சேதுநகரை சேர்ந்தவர் கனகராஜ் மகன் கரண்ராஜ் 6ம் வகுப்பு படித்தார். தீபாவளி கொண்டாட 31ம் தேதி அவர் மாமா வீட்டிற்க்கு கனகராஜ் குடும்பத்துடன் சென்றார். அங்கு உருளை வடிவில் இருக்கும் பட்டாசு திரிக்கு தீப்பற்ற வைத்தார். வெடிக்க தாமதமானதால் பட்டாசு குழாயை உற்றுப்பார்த்தார். அப்பபோது திடீரென மேலே கிளம்பிய பட்டாசு முகத்தில் வெடித்து முகம் சிதைந்து வீட்டார் முன்னிலையிலே பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 1, 2024

பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் ஐங்கரன் (24), இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த அவர் நேற்று(அக்.31) இரவு 12 மணியளவில் தனது புதிய பைக்கில் பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்தபோது வழிகாட்டி பலகை மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!