India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசால் கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் மீனவ இளைஞர்களுக்கு இந்தியகடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படையில் சேர்வதற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தொண்டி, தேவிபட்டினம் கடலோர பாதுகாப்பு குழும கடற்கரை காவல் நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நடந்து வரும் நிலையில், சமீபகாலமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி,விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை எழுந்துள்ளது, தற்போது வானிலை மையம் நாளை (நவ.7) ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளது. மக்கள் தங்களது பணிகளை முன்னேற்பாடு செய்து கொள்ளவும்
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் & கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை(நவ.7) மாலை 5.45 மணிக்குள் <
ராமநாதபுரம் மாவட்டத்தில் தடைக்காலம் முடிந்தபோது ஒரு கிலோ இறால் ரூ.420 வரை ஏற்றுமதியாளர்கள் வாங்கினர். இந்நிலையில் நேற்று குறைந்த அளவில் இறால்கள் சிக்கியால் கிலோ ரூ.650 வரை வியாபாரிகள் வாங்கினர். குறைந்த அளவில் கொண்டு வந்தால் அதிக விலைக்கும், அதிகம் கொண்டு வந்தால் குறைந்த விலைக்கும் ஏற்றுமதி வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து செயல்படுவதால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 13.11.2024 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். இதையொட்டி, ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(05.11.2024) கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்று(05.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. DSP சபரிநாதன் தலைமையில் இன்று ரோந்து பணி நடைபெறும். வேறு எதாவது தகவல் தேவைப்பட்டால் எண் 100-ஐ டயல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 9-ஆம் தேதி மாலை மதுரை வருகிறார். மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்யும் அவர் இரவு ராமேஸ்வரம் சென்று தங்கி மறுநாள் 10-ஆம் தேதி காலை ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் தனுஷ்கோடி செல்லும் ஆளுநர் ரவி மீண்டும் ராமேஸ்வரம் வந்து கார் மூலம் மதுரை சென்று சென்னை செல்கிறார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 13.11.2024 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை சார்ந்த துறை அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். விண்ணப்பங்களை WWW.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் (அ) மண்டல மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை இணை/துணை இயக்குனர்கள் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ நவ.,8-க்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டி அருகே நம்புதாளையில் மணவெளி உறவு காரணமாக பரமக்குடியை சேர்ந்த முத்துக்குமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளி சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம்டிரைவர் கெல்வின் ராஜ் என்பவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து இன்று(நவ.,5) திருவாடானை பகுதியில் பதுங்கியிருந்த சிவகங்கை முத்துராஜா, திருவாடானை பாலகிருஷ்ணன், சொக்கு ஆகியோரை தொண்டி போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.