Ramanathapuram

News March 27, 2024

தேர்தல் பணி: ஆய்வுசெய்த பொது பார்வையாளர்

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது-பார்வையாளர் பண்டாரி யாதவ் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு ஆகியோர் இருந்தனர்.

News March 27, 2024

தேர்தல் பொது பார்வையாளரிடம் புகார் அளிக்கலாம்

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக பண்டாரியாதவ் நியமனம் செய்யப்பட்டு, ராமநாதபுரம் விருந்தினர் மாளிகை அறை எண் 1இல் தங்கி பணியாற்றிவருகிறார். தொகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் (ம) வாக்காளர்கள் தங்களது கோரிக்கைகள் (ம) புகார்களை தினசரி காலை 10 மணிமுதல் 11 மணி வரை நேரிலோ (அ) 9361541271, 04567-230416 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News March 27, 2024

தொண்டி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

image

தொண்டி: திருநகர் பகுதியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தொண்டி போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் குறித்து விசாரணை நடத்தினர்.

News March 27, 2024

ராமநாதபுரம்: என்ஐஏ அதிகாரிகள் சோதனை

image

தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவை சேர்ந்தவர் அன்பு பகுர்தீன் என்பவரின் மகன் சேக்தாவூத் (38). இவரது வீட்டில் என்ஐஏ பிரிவு டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சேக்தாவூத் மற்றும் அவரின் தந்தை அன்பு பகுர்தீன் வீடுகளில் நடத்தப்பட்டுவரும் இந்த சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News March 27, 2024

தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

image

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 26, 2024

ராமநாதபுரத்தில் மேலும் 3 ஓபிஎஸ்’கள் மனுதாக்கல்

image

நாமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக ஓ.பி.எஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஓ.பி.எஸ் என்ற பெயரில் நேற்று ஒருவர் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். அதேபோல் இன்று மேலும் 3 பேர் ஓபிஎஸ் என்ற பெயரில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். ஒரே பெயரில் 5 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2024

மாணக்கருக்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று தமிழ் பாடப்பிரிவு தேர்வு நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற தனது நல்வாழ்த்து சமூக வலைதளம் X மூலம் தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

ஓபிஎஸ்க்கு ஆதரவாக அண்ணாமலை

image

இராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் போட்டுயிடுகிறார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 5ஆம் தேதி இராமநாதபுரம் வருகிறார். பிரச்சாரத்திற்கு வரும் அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக கூட்டணி கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News March 25, 2024

ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மாவட்ட செயலர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர் உடனிருந்தனர்.

News March 25, 2024

திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி வேட்புமனு தாக்கல்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட திமுக தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக மாவட்ட செயலர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் முருகேசன், ராம.கருமாணிக்கம் உடனிருந்தனர்.